states

img

பெட்ரோல் செலவு அதிகமாவதால் குதிரை வாங்கிய தொழிலதிபர்!

பெங்களூரு, ஜன.4- பெட்ரோல் - டீசல் விலை 100 ரூபாயைத் தாண்டிவிட்ட நிலையில், வாகன ஓட்டிகள், இந்த விலை உயர்வைச் சமாளிக்க, மாற்றுப் போக்குவரத்து வசதிகளைத் தேடத் துவங்கியுள்ளனர். அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தெலுங்கானாவைச் சேர்ந்த குர்ரம் நரசிம்மா என்ற விவசாயி ஒருவர், தனது இரு சக்கர வாகனத்தை ரூ. 22 ஆயிரத்திற்கு விற்றுவிட்டு குதிரை ஒன்றை வாங்கினார். தற்போது கர்நாடகத்தைச் சேர்ந்த சிறு தொழிலதிபர் ஒருவரும் பெட்ரோல் விலையை சமாளிக்க குதிரையை வாங்கி அதில் பயணிக்கத் துவங்கியுள்ளார். கர்நாடக மாநிலம் விஜயபுராவை சேர்ந்தவர் பாபுபால் சவன். வயது 49. சிறு தொழிலதிபரான இவருக்கு பெட்ரோல் விலை சமாளிக்க முடியாததாக இருந்துள்ளது. இதையடுத்து, தனது போக்குவரத்து வசதிக்காக குஜராத்தில் இருந்து குதிரை ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார்.  “ஒவ்வொரு மாதமும் ஜிம்முக்கு 4000 ரூபாய் செலவாகிறது. பெட்ரோல் மற்றும் ஜிம்முக்கு செலவாகும் பணத்தை கணக்கு செய்து பார்த்தேன். குதிரை வாங்குவது சரியாக இருக்குமென நினைத்தேன். மேலும், குதிரையால் மாசுபாடும் ஏற்படாது; பெட்ரோலும் சேமிப்பாகிறது” என்று அவர் கூறியுள்ளார்.