பெங்களூரு, மே 7- 3 ஆயிரம் ஆபாச வீடியோக் கள் வெளியாகி கர்நாடகம் மட் டுமின்றி இந்தியாவை அதிர்ச் சிக்குள்ளாக்கியுள்ள பாலியல் வன்கொடுமை வழக்கில் தலை மறைவாக உள்ள முன்னாள் பிர தமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதி ராக சிபிஐ புளூ கார்னர் நோட் டீஸ் விடுத்துள்ளது.
மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி.யான பிரஜ்வல் ரேவண்ணா (33) அதே தொகுதியில் பாஜக கூட்ட ணியின் சார்பில் மீண்டும் கள மிறங்கியுள்ளார். கடந்த மாதம் 26 ஆம் தேதி அங்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்நிலை யில் பிரஜ்வல் ரேவண்ணா பல்வேறு பெண்களுடன் நெருக் கமாக இருக்கும் 3 ஆயிரம் ஆபாச வீடியோக்கள் வெளியா கின. இந்நிலையில் வீட்டு பணிப் பெண், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் பஞ் சாயத்து உறுப்பினர் உள்ளிட்ட 3 பெண்கள் அளித்த புகாரின் பேரில் பிரஜ்வல் மீது 3 பாலி யல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
அவரது தந்தையும் மதச்சார் பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏவுமான ரேவண்ணா (66) மீதும் பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள் ளது. இதையடுத்து சிறப்பு புல னாய்வுக்குழு அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை ரேவண்ணாவை கைது செய்தனர்.
இதனிடையே வெளிநாட் டுக்கு தப்பிச்சென்று தலைமறை வாகியுள்ள பிரஜ்வலை கைது செய்ய சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். மேலும் அவரை கைது செய்ய உதவி செய்யுமாறு சிபிஐ இயக்குநர கத்தின் உதவியையும் காவல் துறையினர் கோரியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து சிபிஐ இயக்குநரகம், பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய உதவுமாறு சர்வதேச போலீ ஸாருக்கு (இன்டர்போல்) இ- மெயில் அனுப்பியுள்ளனர். மேலும் பிரஜ்வலுக்கு நாடுகளுக்கு இடையேயான எல்லையை கடப்பதை தடுக்க புளூ கார்னர் நோட்டீஸும் விடுத்துள்ளனர்.
உதவி மையம் அமைப்பு
ரேவண்ணா, பிரஜ்வல் தொடர்பான புகார்களை தெரி விக்க ஹாசனில் சிறப்பு உதவி மையத்தை அமைத்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் 63609 38947 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என அந்த குழுவின் தலைவர் பி.கே.சிங் தெரிவித்துள்ளார்.