states

img

கர்நாடகாவில் பைக் டாக்ஸி ஓடத் தடை விதிப்பு!

பெண்களுக்குப் பாதுகாப்பானதாக இல்லை எனக் கூறி,  பைக் டாக்ஸி திட்டத்தைக் கர்நாடக அரசு திரும்பப் பெற்றுள்ளது.

2022 டிசம்பர் இறுதியில் கர்நாடகப் போக்குவரத்துத் துறை, பைக் டாக்ஸி சேவைகளை இயக்க உரிமம் வழங்கியது. இந்த திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. இந்நிலையில், ஆட்டோ ஓட்டுநர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், தங்களின் வருவாய் பாதிப்பு அடைவதாகக் கூறி அவர்கள் போராட்டம் மேற்கொண்டனர்.இதையடுத்து, கர்நாடக மாநில அரசு இதற்கான உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உறுதியளித்திருந்தன.

இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு பெங்களூருவில் பைக் டாக்ஸியில் பயணித்த பெண், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், பைக் டாக்ஸி பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது என கூறி தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வந்தது. இதைக் கருத்தில் கொண்டு கர்நாடக அரசு பைக் டாக்ஸிக்கு தடை விதித்துள்ளது.

மேலும் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது, பெண்களுக்குப் பாதுகாப்பற்றது மற்றும் சட்ட விரோதமானது உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து கர்நாடகாவில் பைக் டாக்ஸி திட்டத்தைக் கர்நாடக மாநில அரசு திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

;