states

img

ஏழு நாட்களாக தொடரும் விவசாயிகளின் போராட்டம்-ரயில்கள் ரத்து

தலைநகர் தில்லியில் விவசாயிகளின் எழுச்சி 7 வது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து  வடகிழக்கு பகுதியில் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை  திரும்பப்பெற வலியுறுத்தி தலைநகர் தில்லியில் விவசாயிகள் இன்று 7 வது நாளாக எழுச்சியுடன் போராடி வருகின்றனர். செவ்வாயன்று  விவசாய சங்கங்களுடன் மத்திய அரசுடன் செவ்வாயன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. 

இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்தின் காரணமாக நாட்டின் கிழக்குப் பகுதிக்கு செல்ல வேண்டிய ரயில்களை வடகிழக்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.அதன்படி அஜ்மீர் - அமிர்தசரஸ், திப்ரூகர் - அமிர்தசரஸ் மற்றும் பதின்டா - வாரணாசிக்கு செல்லும் ரயில்களை வடகிழக்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.
ஏற்கனவே விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தையின் போது, புதிய வேளாண் சட்டங்களில் உள்ள குறிப்பிட்ட பிரச்சினைகளை கண்டறிந்து, அதுகுறித்து அரசின் பரிசீலனைக்கு  இன்று தெரிவிக்கும்படி விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளிடம் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த பிரச்சினைகள் தொடர்பாக நாளை (வியாழக்கிழமை) நடைபெறும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையின் போது விவாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
 

;