states

img

மதகடிப்பட்டில் மினி லோடு கேரியர் சிஐடியு சங்கம்  உதயம்

புதுச்சேரி, மார்ச் 27 - சிஐடியு அம்பேத்கர் மினி லோடு கேரியர் சங்க பெயர் பலகை திறப்பு விழா ஞாயிறன்று (மார்ச் 27) புதுச்சேரி அடுத்துள்ள மதகடிப்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே நடை பெற்றது. சங்கத்தின் செயல் தலைவர் அமவாசை தலைமை தாங்கி னார். சங்கக் கொடியை சிஐடியு பிரதேச தலைவர் கே.முருகன் ஏற்றினார். சிபிஎம் மண்ணாடிப்பட்டு கொம்யூன் செயலா ளர் ரகு அன்புமணி பெயர் பலகையை திறந்து வைத்தார். சிஐடியு பிரதேச செயலாளர் சீனிவாசன், துணைத் தலை வர் குணசேகரன், தனியார் போக்குவரத்து சங்கத்தின்  செயலா ளர் மதிவாணன், மாநில நிர்வாகி ரவிச்சந்திரன், விவசாயி கள் சங்கத்தின் பிரதேச செயலாளர் சங்கர் ஆகியோர் வாழ்த் திப் பேசினர். இதில் நிர்வாகிகள் மணிபாலன், தட்சிணா மூர்த்தி, விநாயகம், ரகுநாத், ஜோதிபாசு, சுந்தரமூர்த்தி, ராஜா, மாதவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.