states

img

மின் துறை தனியார்மயமாக்கும் அரசின் முடிவால் மக்கள் அவதி

புதுச்சேரி,அக்.1- மின்துறை தனிர் மயத்தை கண்டித்து புதுச்சேரியில் 4ஆவது நாளாக போராட்டம் நடை பெற்றது. இதனால் மின் சீரமைப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி நகரம் லாஸ்பேட்டை, முத்தியால் பேட்டை, உழவர்கரை மற்றும் பாகூர், திருக்கனூர் ஆகிய பகுதிகளில் மின் பழுது ஏற்பட்டுள்ளது. மின் பழுதை சீரமைக்காததால் மின்மோட்டார் மூலம் தண்ணீர் தொட்டியில் குடி நீர் நிரப்பும் பணிகள் பாதிக்கப்பட்டன. அதேபோல் புதுச்சேரி அடுத்துள்ள பாகூர் குருவிநத்தத்தில் குடி நீர் வினியோகம் பாதிக்கப் பட்டது. இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் தூக்குபாலம் நான்குமுனை சந்திப்பில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன், மாநிலக் கழு உறுப்பினர் கலி யன், கொம்யூன்குழு உறுப்பினர்கள சண்முகம், வடிவேல், அரிதாஸ், திமுக பகுதி நிர்வாகி தேவ முருகன் உட்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.
வினாயகம்பட்டு
மண்ணாடிப்பட்டு கொம்யூனுக்கு உட்பட்ட வினாயகம்பட்டில் ஏற்பட்டுள்ள மின்பழுதை சீரமைக்க வேண்டும், மின்துறையை தனியாருக்கு விடும் முடிவை ரத்து செய்ய வேண்டும் என வலி யுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸட் கட்சியின் கொம்யூன் செயலாளர் அன்பு மணி, மாநிலக்குழு உறுப்பி னர் சங்கர் உட்பட ஏராள மான பொதுமக்கள் கலந்து கொண்டனர். புதுவை மாநிலம் முழுவதும் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசைக் கண்டித்து போராட்டங்கள் நடை பெற்று வருகிறது.

;