states

img

பாஜகவை சவகுழிக்குள் தள்ளுவோம்! புதுவை கருத்தரங்கில் கே.பாலகிருஷ்ணன் அழைப்பு

புதுச்சேரி,பிப்.12- பன்முகத் தன்மையை சீர்குலைக்கும் ஒன்றிய பாஜக ஆட்சியை சவக்குழிக்கு தள்ள அனை வரும் ஓர் அணியில் இணைய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார். “கூட்டாட்சிக் கோட்பாடும், நாடாளுமன்ற ஜன நாயகமும்” என்ற தலைப்பில் புதுச்சேரியில் விடு தலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. தலைமையில் கருத்த ரங்கம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், “இந்தியாவின் பன்முகத் தன்மையை சீர்குலைக்க ஆர்எஸ்எஸ் அமைப்பின் நோக்கமான ஒற்றைக் கலாச்சாரத்தை திணிக்கும் பணியில் ஒன்றிய பாஜக அரசு ஈடுபட்டுள்ளது” என்றார்.

கூட்டாட்சி முறைக்கும் ஆபத்து
வேற்றுமையிலும் ஒற்றுமையாக உலக நாடு களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் வகை யில், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்தல், ஒரே தேர்வு, ஒரே கல்விக் கொள்கை என அனைத்து துறைகளையும் சீரழித்து வருகின்றனர். இது மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.  கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைத்து, நகராட்சி களாக மாநிலங்களை மாற்றும் நடவடிக்கையை பாஜக எடுத்து வருகிறது. அனைத்து அதி காரங்களையும் தன்வசப்படுத்தி மாநிலங்களின் சுயாட்சியை பறித்து வருகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார். நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது இன்றைக்கு மிகப்பெரிய கேள்விக்குறியாகி உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் தங்களது தொகுதி பிரச்சினைகளை பேசுவதற்கு ஒரு நிமிடம், இரண்டு நிமிடம் என்று ஒதுக்கப்படு கிறது. மக்களுக்கு விரோதமான மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் இன்றி நிறைவேற்றப்படுகிறது. இதுதான் நாடாளுமன்ற ஜனநாயகமா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

மாணவர்களுக்கு எதிராக உள்ள நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மை உறுப்பி னர்களின் ஆதரவோடு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்பு தலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு ஆளுநர் ஒப்புதல் தர மறுத்துள்ளார். கல்வி பொதுப்பட்டியலில் உள்ளபோது ஆளுநர் மறுப்பது சரிதானா? இதே நிலை நீடித்தால் மாநிலங்களுக்கு ஆளுநர் தேவையா? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார். பல வடிவங்களிலும் கூட்டாட்சிக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. நாடாளு மன்ற ஜனநாயகத்தை சவக்குழிக்கு அனுப்பும் வேலையை திட்டமிட்டு செய்து வருகிறார்கள். இவற்றையெல்லாம் முறியடிக்க வேண்டும் என்றால் பாஜக ஆட்சியை சவக்குழிக்கு தள்ளி சமாதி கட்டுவதுதான் ஒரே வழி. அப்படிப்பட்ட கள போராட்டங்களை இடதுசாரிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும், திராவிட இயக்கங்களும் நடத்தி வருகின்றன.

மதச்சார்பற்ற சக்திகளும் ஓரணியில் இணைந்து, நாட்டுக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய ஆபத்தை தடுக்க முன்வர வேண்டும் என்று பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார். தொல். திருமாவளவன் பேசுகையில்,“ பாஜக வின் முதல் எதிரி இந்திய அரசியலமைப்பு சட்டம் தான். அதைச் சிதைக்க பாஜக, ஆர்எஸ் எஸ் முயல்கிறது. பாஜக, ஆர்எஸ்எஸ் பொறுத்த வரை மத மாற்றத்தைத் தடுத்து. காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியை நீர்த்துப் போகச் செய்ய வேண்டும் என்பது தான்” என்றார். இந்த கருத்தரங்கில் முன்னாள் முதல்வர் வே.நாராயணசாமி, திமுக கொள்கை பரப்புச் செயலாளர் இரா.சபாபதி மோகன், புதுச்சேரி எதிர்க்கட்சி தலைவர் சிவா, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம், விசிக பொதுச்செயலாளர் சிந்த னைசெல்வன் எம்எல்ஏ, புதுச்சேரி மாநில செய லாளர் தேவ.பொழிலன், மதிமுக அரசியல் குழு தலைவர் மு.செந்திலதிபன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் சலீம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;