states

img

அடிப்படை வசதி கேட்டு ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, மார்ச் 24- அரியாங்குப்பத்தில் குறைந்த மின் அழுத்த பிரச்சனைக்கு தீர்வு காணக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. குண்டும் குழியுமாக உள்ள அரியாங்குப்பம், மண வெளி சாலையை சீர் செய்ய வேண்டும், அரியாங் குப்பம் பகுதியில் பேருந்து நிழற்குடை அமைக்க வேண்டும், அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்,மீனவ மக்களுக்கு டீசல் மானியம் உள்ளிட்டவை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அலு வலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பா  ட்டத்திற்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரியாங்குப்பம் பகுதி செயலாளர் கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். பிரதேச செயலாளர் ராஜாங்கம், நகர கமிட்டி செயலாளர் மதிவாணன், முன்னாள் பகுதி செய லாளர் ஜெகதீசன் ஆகி யோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.