states

img

கண்ணாடி ஆலை தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க சிபிஎம் வலியுறுத்தல்

புதுச்சேரி, நவ.18- தொண்டமாநத்தம் கண்ணாடி தொழிற்சாலையில் பணி நீக்கம் செய்த தொழி லாளர்களுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி அரசை வலி யுறுத்தியது. புதுச்சேரி தொண்ட மாநத்தம் இந்துஸ்தான் கண்ணாடி தொழிற்சாலையில் பணிபுரிந்த 100க்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தலைமையில் போரா ட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற நிரந்தர தொழி லாளர்களை வேலையிலிருந்து நீக்கம் செய்து நிர்வாகம் பழி வாங்கியதுஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல கட்ட போராட்டங்களை தொட ர்ச்சியாக நடத்தி வருகின்றனர். இதனையடுத்து, புதுச்சேரி தொழிலாளர் துறை அதிகாரிகள் தலைமையில் முத்தரப்பு  பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, தொழிலாளர்கள் அனைவருக்கும் மீண்டும் வேலை வழங்குவதாக நிர்வா கம் ஒப்பு கொண்டது. ஆனாலும் வேலையில் சேர்த்துக்கொள்ளவில்லை. இதனால், தொழிற்சாலை வளாகத்தில் கடந்த 10 நாட்க ளுக்கும் மேலாக சிஐடியு புதுச் சேரி மாநில துணைத் தலைவர்  கே. முருகன் தலைமையில் தொழிலாளர்கள் ஒட்டுமொத்த மாக காத்தி ருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இந்த போராட்டத்திற்கு ஆத ரவு தெரிவித்தது மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம் பேசுகையில், “இந்துஸ்தான் கண்ணாடி தொழிற்சாலையின் தொழிலாளர் விரோத நட வடிக்கைக்கு கடும் கண்டனம்  தெரிவித்த அவர், போராடி வரும் தொழிலாளர்களையும், குடும்பத்தையும் பாதுகாக்க முதல்வர் ரங்கசாமி தலையிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 

;