states

img

மின்துறையில் ப்ரீபெய்ட் கட்டண முறைக்கு கண்டனம்: புதுச்சேரியில் இடதுசாரிகள், விசிக ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, பிப். 6- மின்துறையில் ப்ரீபெய்ட் கட்டண முறையை அமல்படுத்துவதை கண்டித்து இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி அரசின் மின் துறையை தனியார் மயமாக்கும் முயற்சியின் முதல்கட்டமாக ப்ரீபெய்ட் கட்டண முறைக்கு ஒப்பந்தம் போட்டுள்ள என்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசை கண்டித்தும். போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி உப்பளம் தலைமை மின்துறை அலுவலகம் அருகே நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் அ.மு.சலீம் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர் வெ.பெருமாள், முன்னாள் அமைச்சர் ஆர்.விசுவநாதன், சிபிஐ எம்எல் மாநிலச் செயலாளர் சோ.பாலசுப்பிரமணியன், விசிக நிர்வாகி தேவ.பொழிலன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
மனு
பின்னர் மின்துறை கண்காணிப்பு பொறியாளர் சண்முகத்தை சந்தித்து, ப்ரீபெய்ட் கட்டண முறையை கைவிடவேண்டும். தொடர்ந்து மின்துறை அரசின் கட்டுபாட்டிலேயே இருக்க அரசை வலியுறுத்த வேண்டும் என்று கோரி மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரி இதுகுறித்து அரசிடம் வலி யுறுத்துவதாக உறுதியளித்தார்.

;