பாட்னா, ஜன. 25 - பீகாரின் சாதிவாரி கணக்கெடுப்பு தான், கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா வழங்க ஒன்றிய அரசை கட்டாயப் படுத்தியது என்று அம்மாநில துணை முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சித் தலைவருமான தேஜஸ்வி கூறி யுள்ளார்.
இதுதொடர்பாக கர்பூரி தாக்கூர் விழாவில் தேஜஸ்வி மேலும் பேசியிருப்பதாவது: “கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்குவது எங்களின் பழைய கோரிக்கையாகும். பிரதமர் நரேந்திர மோடி பீகார் மாநில சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வந்தபோதும் இந்த கோரிக் கையை முன்வைத்தோம்.
எங்களின் மாபெரும் தலைவர் லாலு பிரசாத்தும், இந்த கோரிக்கையை தொடர்ந்து வலி யுறுத்தியுள்ளார். இறுதியாக கர்பூரி தாக்கூருக்கு பாரத் ரத்னா அறிவிக்கப் பட்டு இருப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம்.
இது எங்களுக்கு கிடைத்த பெரிய வெற்றி. பீகார் அரசு நடத்திய சாதிவாரி கணக்கெடுப்பு, கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டிய நெருக் கடியில் ஒன்றிய அரசைத் தள்ளியது என்பதுதான் உண்மை. நாடு முழு வதும் எழுந்துவரும் சாதிவாரிக் கணக் கெடுப்பு கோரிக்கையால், பாஜக-வில் அச்சமான சூழல் நிலவுகிறது.
இதனா லேயே சோசலிச சின்னமான கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா வழங்கியுள்ளது. அதேபோல பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் கன்சிராம், சோசலிஸ்ட் தலை வர் ராம் மனோகர் லோகியா ஆகி யோருக்கும் பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறிவைக்க சிபிஐ மற்றும் அமலாக்க இயக்குநரகத்தை (ED) ஒன்றிய அரசு பயன்படுத்துகிறது. லாலு பிரசாத் முன்பு பாஜகவிடம் பணியவில்லை.
நானும் (தேஜஸ்வி) பணிய மாட்டேன். மக்களவைத் தேர்தலில் முழு பலத்து டன் போராடுவோம். ஒருபோதும் பிரி வினைவாத சக்திகள் சமூகத்தில் பிளவை ஏற்படுத்த அனுமதிக்க மாட்டோம்”. இவ்வாறு தேஜஸ்வி பேசியுள்ளார்.