states

img

பீகாரில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 10 பேர் பலி

பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 
பீகார் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது. அப்போது, சரண் மாவட்டத்தில் ஆறு பேரும் , சிவான், ஹாஜிபூர், பாங்கா மற்றும் கோபால்கஞ்ச் மாவட்டங்களில் தலா ஒருவரும் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் மோசமாக வானிலையின் காரணமாக பொதுமக்கள் வீட்டிலேயே தங்கி இருக்குமாறு அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பீகாரில் கடந்த ஜூன் 24ஆம் தேதி முதல் இதுவரை 30 க்கும் மேற்பட்டோர் மின்னல் தாக்கியதால் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் தொடர்ந்து கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

;