states

img

ஹைதராபாத்தில் அழிவை உருவாக்க பிளவுவாத சக்திகள் முயற்சி... தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் குற்றச்சாட்டு

ஹைதராபாத்:
தெலுங்கானாவில் அண்மையில் நடைபெற்ற தூப்பக் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் எதிர்பாராத விதமாக பாஜக வெற்றிபெற்றது. இதனால் தைரியமான அந்தக்கட்சி, தற்போது ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலிலும் தாங்களே வெற்றிபெறப் போகிறோம் என்று அமித்ஷா,ஆதித்யநாத், நட்டா, பட்னாவிஸ் போன்றவர்களை அழைத்து வந்து, ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி மற்றும் மஜ்லிஸ் கட்சிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பாஜக-வுக்கு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பதிலடி ஒன்றைக் கொடுத்துள்ளார்.அதில், “தெலுங்கானா மாநிலம் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தனிநபர் வருமானத்தில் 13-ஆம் இடத்தில் இருந்தது. இப்போது,5-ஆம் இடத்திற்கு முன்னேறி உள்ளது. ஆனால் உத்தரப்பிரதேசம் 28 அல்லது 29-ஆவது இடத்தில் இருக்கிறது.ஆனால், அந்த மாநிலத்தின் முதல்வர் (ஆதித்யநாத்) இங்கு வந்து, தெலுங்கானா மக்களுக்கு பாடம் நடத்துகிறார்” என்று கடுமையாக விளாசியுள்ளார்.அதேபோல் மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும் (பட்னாவிஸ்) ஹைதராபாத் வந்துபேசியதாகவும், ஆனால், அவர்கள் மாநிலமும் தனிநபர் வருமானத்தில் 10-வது இடத்தில்தான் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டியுள்ள சந்திரசேகரராவ், “நாட்டை பிளவுபடுத்தும் இந்த சக்திகளின் உண்மையான நோக்கம் ஹைதராபாத்தில் நுழைந்து அழிவை உருவாக்குவது மட்டுமே! என்றும் குறிப்பிட்டுள்ளார்.மேலும், “நாம் இதை அனுமதிக்கப் போகிறோமா? நமது அமைதியை இழக்கப் போகிறோமா? நமது குழந்தைகளின் எதிர்காலத்தை தொலைக்கப் போகிறோமா? என்பதை யோசிக்க வேண்டும்” என்று தெலுங்கானா மக்களையும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

;