states

img

சிலிண்டரில் மோடி புகைப்படம் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி

தெலுங்கானா மாநிலத்தில் மோடி சிரிக்கும் புகைப்படத்துடன் ரூ.1105 என்று விலை குறிப்பிடப்பட்டிருந்த படத்தை சிலிண்டர்களில் ஒட்டி கொண்டு செல்லப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

தெலுங்கானா மாநிலத்தின் காமரெட்டி மாவட்டம் பிர்குரில் உள்ள நியாய விலைக் கடை ஒன்றில் ஆய்வு செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அங்கு மோடியின் புகைப்படம் ஏன் வைக்கவில்லை என்று கொந்தளித்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், மோடி சிரிக்கும் புகைப்படத்துடன் ரூ.1105 என்று விலை குறிப்பிடப்பட்டிருந்த படத்தை சிலிண்டர்களில் ஒட்டி, அவற்றை வாகங்கனத்தில் எடுத்து செல்லும் விடியோ ஒன்றை டி.ஆர்.எஸ் கட்சியினர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

;