லக்னோ,பிப்.20 - ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருவோம் என நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதியளித்த நரேந்திர மோடி மற்றும் பாஜக தலை வர்கள், ஆட்சிக்கு வந்த பின்னர், லாபம் தரும் பொதுத்துறை நிறுவனங்களை விற்பதிலே தீவிரம் காட்டுகின்றனர்.இதற்கு தொழி லாளர்களும் அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வரு கின்றனர். ஆனால் மோடி அரசு வேலை வாய்ப்புகளை உருவாக்க எந்த நடவடிக்கை யும் எடுக்காமல், கார்ப்பரேட் கம்பெனி களுக்கே விசுவாசமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் விலைவாசியை அதி கரித்த, வேலைவாய்ப்பை உருவாக்காத மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் மத்தியில் கோபம் எழுந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச தொடங்கிய போது,
அவரை பேசவிடாமல் அங்கிருந்த இளைஞர்கள் ‘வேலைவாய்ப்பு எங்கே’ என கேள்வி எழுப்பி,முழக்கமிட்டனர். உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வரு கிறது. இதில் பாஜக சார்பிலான பொதுக் கூட்டம் பிஜ்னோரில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பேசுவதற்காக ஒலிப்பெருக்கி முன்பு வந்து நின்றபோது, அங்கிருந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் , வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருமாறும், ராணுவத்தில் ஆள்சேர்ப்புக்கு நடவடிக்கை எடுக்குமாறும் கோஷமிட்டனர். இதனால் அமைச்சர் மற்றும் பாஜகவினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் வேறுவழியில்லாமல் ராஜ்நாத் சிங், கொரோனா பரவல் இருந்ததால் ராணுவ ஆள்சேர்ப்பில் தாமதம் ஏற்பட்ட தாகவும், விரைவில் அந்த நடவடிக்கை தொடங்கப்படும் என்று உறுதி அளித்தார்.