states

img

புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்பப் பெறுக

வேலூர், ஏப். 6- புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்பப் பெறக் கோரி வேலூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் மற்றும் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் கே.ராஜேந்திரன், சாலை போக்குவரத்து மாவட்டத் தலைவர் ஜி.கேச வன் கூட்டாக தலைமை தாங்கினர். சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.பி.ராமச் சந்திரன் துவக்கி வைத்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன், ஆட்டோ தொழிலாளர் சங்க  மாவட்டச் செயலாளர் டி.முரளி, சாலை போக்குவரத்து மாவட்டச் செயலாளர் என்.பிரபாகரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். ஆட்டோ தொழி லாளர் சம்மேளன மாநில துணைப் பொதுச் செயலா ளர் எம்.சந்திரசேகரன் நிறைவு செய்து பேசினார்.