விழிஞ்ஞம் துறைமுகம் சாதனை
விழிஞ்ஞம் துறைமுகம் வணிக நடவடிக்கைகளைத் தொ டங்கிய பத்து மாதங்களுக்குள் ஒரு புதிய மைல்கல்லைக் கடந்துள்ளது. குறுகிய காலத்தில் 500 கப்பல்கள் விழிஞ்ஞத்தை வந்தடைந்துள்ளன. உலகின் மிகப்பெரிய சரக்குக் கப்ப லான எம்.எஸ்.சி வெரோனா செப்.23 செவ்வாயன்று காலை துறை முகத்தில் நங்கூரமிட்டபோது தெற்காசி யாவிலேயே முதல் முறையாக இக் கப்பல் நிறுத்தப்பட்டது என்ற சாத னையை படைத்தது. உலக சரக்குக் கப்பல் போக்கு வரத்தில் விழிஞ்ஞம் எவ்வளவு முக்கிய மானது என்பதற்கு இந்தப் புதிய சாதனை சான்றாகும் என்று அமைச்சர் வி.என். வாசவன் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் இதுவரை கையா ளப்பட்ட ஆழமான கொள்கலன் கப்ப லான எம்.எஸ்.சி வெரோனா, இத்துறை முகத்தில் நங்கூரமிட்டதன் மூலம், விழிஞ்ஞம் ஒரே நாளில் இரண்டு சாதனை களைப் படைத்துள்ளது. விழிஞ்ஞம் ஒவ்வொரு கட்டத்திலும் உறுதியான அடிவைத்து வளர்ந்து வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விழிஞ்ஞம் துறைமுகம் அதன் தொடக்கத்திலிருந்தே சாதனை படைத்து முன்னேறி வருகிறது. முதல் ஒன்பது மாதங்களில் 10 லட்சம் கொள்கலன்க ளைக் கையாண்டுள்ளது. ஒப்பந்தத்தின் படி முதல் ஆண்டு மொத்தம் 3 லட்சம் கொள்கலன்களைக் கையாளும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விழிஞ்ஞம் அதை விட மூன்று மடங்கு அதிகமாகக் கையாண்டு அதன் வலிமையை நிரூபித்துள்ளது. விழிஞ்ஞத்தில் வணிக நடவடிக்கை கள் 2024 டிசம்பர் 3 அன்று தொடங்கி யது. ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்பி ரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட உலகின் முக்கிய கடல்சார் வர்த்தகப் பகுதிக ளுக்கு நேரடி சேவைகள் தொடங்கப் பட்டதன் மூலம் விழிஞ்ஞத்தின் வளர்ச்சி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.