லக்னோ, பிப்.26- உத்தரப் பிரதேச மாநிலம், மதுரா நகரின் அருகே அமைந்துள்ளது அட்டா கிராமம். 130 குடும்பங்கள் வசிக்கும் இந்த கிராமத்தில், உயர சாதியினர் என்று கருதப்படும் ஜாட் பிரிவினர் அதிகபட்சமாக 70 குடும் பங்கள் உள்ளனர். இந்நிலையில், இங்குள்ள தலித் குடும்பம் ஒன்று, சட்டப்பேரவைத் தேர்தலில், மாயாவதி தலைமை யிலான பகுஜன் சமாஜ் கட்சியின் யானை சின்னத்திற்கு வாக்களித்த தாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜாட் பிரிவைச் சேர்ந்த சாதியவாதிகள், சில நாட்களுக்கு முன்பு, தலித் குடும்பத்தின் வீட்டிற்குள் புகுந்து, ஆயுதங்களாலும், செங்கற்களாலும் கொடூரமான தாக்குதல் நடத்தி யுள்ளனர். இதில் தலித்துக்கள் 6 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் ரத்தம் சொட்டச் சொட்ட தங்களுக்கு நீதிகேட்டு மகோரா காவல் நிலை யத்திற்கு சென்றபோது, போலீசார் அவர்களின் கோரிக்கையைக் கேட்ப தற்குப் பதிலாக, பாதிக்கப்பட்ட தலித் மக்களையே திட்டி விரட்டியுள்ளனர். தாக்குதல் தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் பரவிய நிலையில், பிரச்சனை தீவிரமா வதை தாமதமாக உணர்ந்த காவல் துறையினர், தற்போது 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதேநேரம், யானை சின்னத்திற்கு வாக்களித்ததால், இந்த தாக்குதல் நடக்கவில்லை. மாறாக, கிரிக்கெட் போட்டி தொடர்பான தகராறிலேயே தாக்குதல் நடந்துள்ளது என்று பிரச்ச னையை திசைத்திருப்பும் முயற்சி யிலும் இறங்கியுள்ளனர்.