மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள்
துவங்கியதாக ஒன்றிய அரசு தகவல்
2027 க்கான மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான ஆயத்த பணிகளை துவங்கி விட்டதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. தேசிய மக்கள் தொகை கணக்கெடு ப்பு, 2027 மார்ச் 1 அன்று துவங்கும் என ஒன்றிய அரசு அறிவித்திருந்தது. இந் நிலையில் மக்களவையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தது. இதற்கு உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் எழுத்துப்பூர்வமாக கொடுத்த பதிலில் மக்கள் தொகை கணக் கெடுப்பை நடத்துவதற்காக ஜூன் 16 அன்று வெளியிடப்பட்ட அரசிதழ் வெளி யீடு மூலம் மக்கள் தொகை கணக்கெ டுப்புக்கான ஆயத்தப் பணிகள் துவங்கி விட்டன. இது தொடர்பாக ஜூலை 3 மற்றும் 4 அன்று தில்லியில் 2 நாள் மாநாடு நடை பெற்றது. இம்மாநாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகளின் இயக் குநர்கள், ஆணையர் அலுவலகத்தின் அதிகாரிகள், இயக்குநரகங்களின் மூத்த அதிகாரிகள், இந்திய பதிவாளர் கலந்து கொண்டனர் என தெரிவித்துள்ளார்.