states

தீக்கதிர் விரைவு செய்திகள்

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிக அளவில்  கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால் பிரா மணர்களே பயனடைகிறார்கள் என அமெரிக்கா வின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ கூறிய கருத்து தவறானது என வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் கூறி யுள்ளார்.

தில்லியில் நடந்த விருந்து நிகழ்ச்சியின் போது  கழிவறையில் வைத்து பெண் ஒருவரை தொலைக்காட்சி சீரியல் நடிகர் ஆஷிஷ் கபூர் பாலி யல் பலாத்காரம் செய்தார். பாதிக்கப்பட்ட பெண்  அளித்த புகாரின் அடிப்படையில் நடிகர் ஆஷிஷ் கபூர் மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் கைது செய்யப்பட்டார்.

பாஜக ஆளும் ம.பி.யில் ரூ.500 கோடி கேட்டு  பெண் நீதிபதிக்கு மிரட்டல்

மத்தியப்பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரு கிறது. இந்த மாநிலத்தின் ரேவா  மாவட்டம் தியோந்தர் நீதிமன்றத்தில் பணியாற்றும் பெண் நீதிபதி மோகினி  பதோரியாவுக்கு செப் 2ஆம் தேதி பதி வுத் தபால் மூலம் மிரட்டல் கடிதம் ஒன்று  வந்தது. உத்தரப்பிரதேசத்தின் அலகா பாத்தில் இருந்து அனுப்பப்பட்டிருந்த அந்தக் கடிதத்தில்,”நீங்கள் உயிருடன் இருக்க விரும்பினால் 500 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும்” என அதில் கூறப் பட்டுள்ளது. மேலும் கடிதத்தில் பிரபல கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த சந்தீப் சிங் என்பவரின் பெயரில் கடிதம்  கையொப்பமிடப்பட்டிருந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக நீதிபதி அளித்த புகா ரின் பேரில், காவல்துறை விசாரணை யைத் தொடங்கியது. எனினும் கடிதம் எழுதியது சந்தீப் சிங் இல்லை என்றும், 74 வயது முதியவர் தேவராஜ் என்றும் அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் வெளி யாகியுள்ளன.