states

img

இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்துவர தடை!

பெங்களூரு, ஜன.20- இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப், புர்கா அணிவது வழக்க மாக உள்ளது. ஆனால், கர்நாடக மாநி லம் உடுப்பி அருகே பாலகாடி அரசுக் கல்லூரிக்கு இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு கல் லூரியின் முதல்வர் அனுமதி மறுத்து விட்டார்.  இந்த தடைக்கு எதிராக சம்பந் தப்பட்ட மாணவியர் வகுப்பறைக்கு வெளியில் அமர்ந்து தொடர் போராட் டம் நடத்தவே, மாவட்ட ஆட்சியர் தலையிட்டு, ஹிஜாப் அணிந்து வகுப் பறைக்கு வருவதற்கு அனுமதி அளித்தார்.  ஆனால், இஸ்லாமிய மாணவி கள் ஹிஜாப் அணிந்தால், நாங்கள் காவித்துண்டு அணிவோம் என்று இந்துத்துவா ஆதரவு மாணவர்கள், ஏட்டிக்குப் போட்டியாக காவித் துண்டு அணிந்தபடி வகுப்பறைக்கு வந்தனர்.  இந்தப் பின்னணியில் 1,000-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ - மாணவி யரின் பெற்றோர்கள் கலந்து கொண்ட கருத்துக் கேட்பு கூட்டத்தை கல்லூரி நிர்வாகம் நடத்தியது.

இக் கூட்டத்திற்கு உடுப்பி எம்எல்ஏ மற்றும் கல்லூரி முதல்வர் ரகுபதி பட் ஆகி யோர் தலைமை தாங்கினர். இந்தக் கூட்டத்தின் முடிவில், “கல்லூரியில் பின்பற்றப்படும் சீருடையே அனை வருக்கும் பொதுவானது. இந்த சீருடை பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த அனைத்து மாணவிகளுக் கும் பொருந்தும். இது மாணவர் சேர்க்கையின்போதே தெளிவுபடுத் தப்பட்டுள்ளது” என்று கல்லூரி முதல் வர் அறிவித்தார். ஆனால், கல்லூரி நிர்வாகமா னது, முஸ்லிம் மாணவர்களிடம் பார பட்சமாக நடந்து கொள்வதாகவும், உருது மொழிகளில் பேசவிடாமல் தடுப்பதாகவும் குற்றம்சாட்டி மாண விகள் மீண்டும் வகுப்பறைக்கு வெளியே போராட்டத்தைத் துவங்கி யுள்ளனர். 6 மாணவியரே இப் போராட்டத்தை நடத்திவந்த நிலை யில், தற்போது 7-ஆவதாகவும் ஒரு மாணவி போராட்டத்தில் இணைந் துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரி வித்துள்ள கர்நாடக கல்வி அமைச்சர் பி.சி. நாகேஷ், “1985இல் சீரான ஆடைக் குறியீடு உருவாக்கப்பட் டது. கல்லூரி அதிகாரிகள் அதை கடைப்பிடிக்க விரும்புகிறார்கள். இது கடந்த 36 ஆண்டுகளாக பின்பற் றப்பட்டு வருகிறது. அதிகபட்ச முஸ் லிம் மாணவிகளுக்கு எந்தப் பிரச்ச னையும் இல்லை. தற்போது ஆறு பேருக்கு மட்டுமே பிரச்சனை உள் ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

;