புதுதில்லி, ஜூன் 17 - சுவிஸ் வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் சேமிப்பு தொகை குறித்த விவரங்களை ஒவ்வொரு ஆண்டும் சுவிட்சர்லாந்து அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு நிலவரப்படி சுவிஸ் வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் மொத்த வைப்பு தொகை குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த தகவலின்படி கடந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக இந்தியர்களின் பணம் சுவிஸ் வங்கிகளில் மொத்தம் ரூ. 30 ஆயிரத்து 500 கோடி இருப்பது தெரியவந்துள்ளது. 2020ஆம் ஆண்டில் இந்தியர்களின் பணம் சுவிஸ் வங்கிகளில் 20 ஆயிரத்து 700 கோடி ரூபாய் அளவிலேயே இருந்த நிலையில், அதனுடன் ஒப்பிடுகையில், தற்போது சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரித்து இருக்கிறது. அதாவது ஒரே ஆண்டில் மட்டும் இந்தியர்களின் சேமிப்பு 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மேலும், இந்த தொகை கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய தொகை என்பதும் தெரியவந்துள்ளது.