states

img

150 கோடி டோஸ் தடுப்பூசிகள் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி பெருமிதம்

புதுதில்லி, ஜன.31- ஒரு வருடத்திற்குள், 150 கோடி டோஸ்  தடுப்பூசிகளை செலுத்தி சாதனை படைத்துள் ளோம் என நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றும் போது கூறினார். இதில் ஆண்டின் முதல் கூட்டமான பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடை பெறுகிறது. குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியுள்ள இந்தக் கூட்டத்தில், பிப்ரவரி  1 (இன்று) பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் திங்கள் காலையில் தொடங்கிய இரு அவை களின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தினார். முன்ன தாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாற்றுவதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சம்பிரதாய முறைப்படி  குதி ரைப்படை அணிவகுப்புடன் நாடாளுமன்றம் அழைத்துவரப்பட்டார். கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர் பேசியதாவது:

நாட்டின் பாதுகாப்பான எதிர்காலத்திற்கு கடந்த காலத்தை நினைவில் வைத்துக் கொள் வதும், அதிலிருந்து கற்றுக் கொள்வதும் மிகவும் முக்கியம் என எனது அரசு நம்புகிறது. ஏழைகளுக்கு விரைவில் மருத்துவ வசதி கிடைக்க ஆயுஷ்மான் உதவியுள்ளது. இந்தியா வில்  உலக சுகாதார அமைப்பின்  முதல் பாரம் பரிய மருத்துவ மையம்  அமைய உள்ளது. கொரோனா காரணமாக பல உயிர்கள் பலி யாகியுள்ளன. இதுபோன்ற சூழ்நிலைகளிலும் நமது ஒன்றிய, மாநில, மருத்துவர்கள், செவி லியர்கள், விஞ்ஞானிகள், நமது சுகாதாரப் பணியாளர்கள் குழுவாகப் பணியாற்றினர். நமது சுகாதார மற்றும் முன்னணி ஊழி யர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனாவுக்கு  எதிரான போரில் இந்தியாவின் திறன் தடுப்பூசி திட்டத்தில் தெளிவாகத் தெரிந்தது. ஒரு வருடத்திற்குள், 150 கோடி டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி  சாதனை படைத்துள்ளோம். இன்று, அதிகபட்ச அளவு மருந்துகளை வழங்குவதில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக இருக்கிறோம்.கொரோனா தடுப்பூசி இயக்கம் நாடு முழு வதும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.  கல்வி: அரசு ஆத்மநிர்பர் பாரதத்திற்கு வடிவம் கொடுக்க தேசிய கல்விக் கொள்கை யை கொண்டு வந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பத்து மாநிலங்களில், தேசிய கல்விக்  கொள்கையின் ஒரு பகுதியாக, பிராந்திய மொழியில் தொழில்நுட்பக் கல்வி கற்பிக்கப்படும். முக்கியமான நுழைவுத் தேர்வு கள் பிராந்திய மொழிகளில் நடத்தப்படும். விவசாய உற்பத்தி: இந்தியாவின் விவசாய ஏற்றுமதி மூன்று லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

கொரோனா தொற்று நோய் இருந்த போதிலும், 2020-21 ஆம் ஆண்டில் விவசாயி கள் 30 கோடி டன் உணவு தானியங்களையும் 33 கோடி தோட்டக்கலைப் பொருட்களையும் உற்பத்தி செய்துள்ளனர். ஒன்றிய அரசு 433 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையை கொள்முதல் செய்துள்ளது, இதன் மூலம் 50 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.  பிஎம்-கிசான் திட்டம் மூலம் 11 கோடிக்கும் அதிகமான விவசாயக் குடும்பங்கள் 1.80 லட்சம் கோடி ரூபாய் பெற்றுள்ளன. கிசான்-ரயில் மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நாடு முழுவதும் கொண்டு  செல்ல உதவியது. நாட்டில் 80 சதவீத விவசாயிகள் சிறு விவசாயிகள் மற்றும் பிரதமர் கிசான் சம்மன் நிதி மூலம், நாட்டில் உள்ள அனைத்து சிறு விவசாயிகளுக்கும்உதவுகிறது. குடிநீர் திட்டங்கள்: பிரதமரின் ஆவாஸ் யோஜனா மூலம் அரசு ஏழைகளுக்கு வீடுகள்  கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. ஜல் ஜீவன்  மிஷன் மூலம் பல வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கள் வழங்கப்பட்டு வருகின்றன. ‘ஹர் கர் ஜல்’ திட்டத்தின் கீழ் ஆறு கோடிக்கும் அதிகமான கிராமப்புற குடும்பங்கள் குழாய் நீரைப் பெறுகின்றன. 

பாலின சமத்துவம்

பாலின சமத்துவத்தை ஏற்படுத்த, பெண் களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தப் பட்டுள்ளது.  முத்தலாக்கை கிரிமினல் குற்றமாக ஆக்கி முஸ்லிம் பெண்களுக்கும் உதவி யுள்ளது. 2014 ஆம் ஆண்டுக்கு முன்னர் சிறு பான்மை சமூகத்தைச் சேர்ந்த சுமார் மூன்று  கோடி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்ட நிலையில், 2014 ஆம் ஆண்டு முதல் 4.5 கோடி மாணவர்களுக்கு கல்வி  உதவித்தொகை வழங்கியுள்ளது. இது முஸ்லிம் சிறுமிகளின் பள்ளி இடைநிற்றல் விகிதத்தை கணிசமாகக் குறைத்துள்ளது. நாடு  முழுவதும் பாலினத்தை உள்ளடக்கிய நிதியம்  அமைக்கப்பட்டுள்ளது. 

5-ஜி, ஸ்டார்ட் அப்கள்: நாட்டில் 5-ஜி தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு வருகிறது 2016-ஆம் ஆண்டு  முதல், 56 வெவ்வேறு துறைகளில் 60,000 க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்-அப்கள் நாட்டில் அமைக்கப்பட்டுள்ளன, இது  ஆறு லட்சம் புதிய வேலைகளுக்கு வழிவகுத் தது. அரசின் இடைவிடாத முயற்சிகள் காரண மாக உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும்  பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுக்க வழிவகுத்தது.  ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சி கண்டு வருகிறது. கல்வி, சுகாதாரம் மற்றும் வளர்ச்சி ஆகிய துறைகளில், அரசு தொடர்ந்து  கவனம் செலுத்தி வருகிறது. சிந்து மத்திய பல்கலைக்கழகம். லடாக்கில் உருவாக்கப் பட்டு வருகிறது. வடகிழக்கு மாநிலங்கள்: வடகிழக்கு மாநி லங்கள் வளர்ச்சியடைந்து வருகின்றன. ரயில்  மற்றும் விமானங்கள் மூலம் இந்த மாநிலங்கள் நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கப் பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு: மார்ச் 2014இல் 90,000 கிமீ தேசிய நெடுஞ்சாலைகள் இருந்த நிலையில், இப்போது 1.40 லட்சம் கிமீ  தேசிய நெடுஞ்சாலைகள் என்ற வலை யமைப்பை நாடு பெற்றுள்ளது. 11 புதிய மெட்ரோ ரயில் பாதைகள் தொடங்கப் பட்டுள்ளன, இதனால் எட்டு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான பயணிகள் பயன டைந்துவருகின்றனர். ஒன்றிய அரசு  பி.ஆர். அம்பேத்கரின் தொலைநோக்குப் பார் வையைப் பின்பற்றுகிறது, நாட்டில் பிற்படுத்தப்பட்ட சாதிகள் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ளன.  இவ்வாறு அவர் உரையாற்றினார்.