states

img

கரண்ட் பில் கட்டாமல் டிமிக்கி கொடுத்த ம.பி. பாஜக அமைச்சர்!

போபால், டிச. 24 - மத்தியப் பிரதேசத்தில் மின்கட்ட ணம் செலுத்தாதவர்களின் பட்டியலில், அம்மாநில வருவாய்த்துறை அமைச்சரின் பெயரே முதல் பெயராக வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநிலத்தில் மின்கட்டணம் செலுத்தாத வர்களின் பட்டியலை அம்மாநில மின்துறையினர் வெளியிட்டுள்ளனர். இந்தப் பட்டியலில்தான் மத்தியப் பிர தேச வருவாய் மற்றும் போக்கு வரத்துத் துறை அமைச்சர் கோவிந்த் சிங் ராஜ்புத்-தின் பெயர் முதல் இடத் தில் இடம்பெற்றுள்ளது. அவர், 84  ஆயிரத்து 388 ரூபாய் மின்கட்டண பாக்கி  வைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அமைச்சர் மட்டுமின்றி, அமைச்ச ரின் சகோதரர் குலாப்சிங் ராஜ்புத்தும், மின்கட்டணம் செலுத்தாமல் அதி காரிகளை அலைக்கழிப்பு செய்துள் ளார்.

குலாப்சிங் ராஜ்புத் தன்பங்கிற்கு 34 ஆயிரத்து 667 ரூபாய் மின்கட்டண பாக்கி வைத்துள்ளார். இதேபோல மத்தியப் பிரதேச மாநி லத்தில் உள்ள ஒரு மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் 11 ஆயிரத்து 445  ரூபாயும், மாவட்ட காவல் கண்காணிப்  பாளர் அலுவலகம் ஒன்று 23 ஆயிரத்து 428 ரூபாயும், எஸ்.ஏ.எப். 16-ஆவது பட்டாலியன் அலுவலகம் 18 ஆயிரத்து 650 ரூபாயும், வழக்கறிஞர்களுக்கான ‘வக்கீல்சந்த்’ அலுவலகம் 30 ஆயிரத்து 209 ரூபா யும் பாக்கி வைத்துள்ளன. இதையடுத்து, மக்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டிய மாநில அமைச்சரே மின்கட்டணம் செலுத்தா மல் அதிகார துஷ்பிரயோகம் செய்திருப் பது ம.பி. மாநிலத்தில் எதிர்க்கட்சி களின் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.