states

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து

மிகக் கடுமையான கிராமப்புற நெருக்கடியும் வேதனையும்! மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் குறைந்தபட்சம் தின ஊதியம் ரூ.337 கொடுக்க வேண்டும் என இருந்தாலும் 207தான் தரப்படுகிறது. எனினும் கூட வரலாறு காணாத அளவுக்கு மே மாதம் 3.1 கோடி குடும்பங்கள் வேலை கேட்டு பதிவு செய்துள்ளன. 43 சதவீதம் உயர்வு! இந்த திட்டத்துக்கு உடனடியாக நிதி ஒதுக்கீட்டை அதிகரியுங்கள்.

விவசாயம் சாராத கிராமப்புற ஊதியம் வீழ்ச்சி!   இரு சக்கர வாகனங்கள் விற்பனை 21 சதவீதம் சரிவு! விவசாய இடுபொருட்கள் விலை 11 சதவீதம் உயர்வு!  குறைந்தபட்ச ஆதார விலை 5.8 சதவீதம் மட்டுமே அதிகரிப்பு!  கிராமப்புற சந்தை விற்பனை 5.8 சதவீதம் சரிவு! எனினும் மோடி அரசிடமிருந்து மக்களுக்கு நிவாரணம் இல்லை!கிரிமினல் குற்றம்!!