states

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி எப்போது?

புதுதில்லி, டிச.7- நாட்டில் ஒமைக்ரான் தொற்றுப்ப ரவல் 23 பேருக்கு உறுதி செய்யப் பட்டுள்ள நிலையில்,  12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோ னா தடுப்பூசி செலுத்துவது தொடர் பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு ஏதும் எட்டப்பட வில்லை. தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (The National Technical Advisory Group on Immunization (NTAGI) திங்களன்று கூடியது. நோயெதிர்ப்பு குறைபாடுள்ள வர்களுக்கு கூடுதல் மருந்தை அனு மதிக்கலாமா அல்லது கொரோனா வால் அதிக ஆபத்தில் உள்ளவர் களுக்கு கூடுதல் டோஸ் அனு மதிக்கலாமா என்று விவாதிக்க இக்கூட்டம் கூடியது, குஜராத், ராஜஸ்தான், கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த மொத்தம் 23 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப் பட்டுள்ள நிலையில் தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோச னைக் குழுவின் முடிவு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், எந்த முடிவும் எட்டப் படாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தி யுள்ளது.

இது தொடர்பாக ஏஎன்ஐ வெளி யிட்டுள்ள செய்தியில், “பூஸ்டர் டோஸ் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படவே இல்லை. மாறாக கூடுதல் டோஸ் பற்றி ஆலோ சிக்கப்பட்டது. பூஸ்டர் டோஸ் என்பது குறிப்பிட்ட கால இடை வெளியில் அளிக்கப்படும் தடுப்பூசி. ஆனால், கூடுதல் டோஸ் என்பது நோய் எதிர்ப்பாற்றலில் சிக்கல் உடையோர், தொற்று ஏற்பட அதிக வாய்ப்புடையவர்களுக்கு அளிக்கப்படும் தடுப்பூசி டோஸ். இரண்டு டோஸ்களால் போதி யளவில் உடலில் எதிர்ப்பாற்றலை ஏற்படுத்த முடியாவிட்டால் மட்டுமே மூன்றாவது டோஸ் செலுத்தப் படும். ஆகையால், கூட்டத்தில்  கூடுதல் டோஸ், குழந்தைகளுக் கான தடுப்பூசி பற்றி மட்டுமே ஆலோ சிக்கப்பட்டது. ஆனால் அதிலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை” என்று தெரிவித்துள்ளது.

சௌமியா சுவாமிநாதன்

இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி யளித்த உலக சுகாதார நிறு வனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன், “கொரோனா பாதித்தவர்களுக்கு 90 நாட்களுக்குப் பின்னர் மீள் தொற்று ஏற்படும் அபாயம் இருக்கும். அத்தகையோருக்கு டெல்டா திரிபைவிட ஒமைக்ரான் திரிபால் மீள் தொற்று ஏற்பட மூன்று மடங்கு  அதிக வாய்ப்புள்ளது. ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் படுவோரின் எண்ணிக்கை என்ன வென்பதைத் தெரிந்து கொள்ள நாம் இன்னும் இரண்டு முதல் மூன்று வாரங்கள் காத்திருக்க வேண்டும்.  தென் ஆப்பிரிக்காவில் ஓமை க்ரானால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக இருக் கிறது. அதிலும் குறிப்பாக குழந்தை களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். தென் ஆப்பிரிக்கா அதிகமாக சோதனைகளை மேற்கொள்கிறது.  குழந்தைகளுக்கு இன்னும் பல நாடுகள் தடுப்பூசி செலுத்தவில்லை. மிகக் குறைவான நாடுகளே அதுவும் குறைந்த அளவிலேயே தடுப்பூசியை செலுத்தியுள்ளன. அத னால் ஒமைக்ரானால் குழந்தை களும், தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களும் பாதிக்கப்பட லாம். இருப்பினும் நாங்கள் உலக நாடுகளில் இருந்து இன்னும் அதிக மான தரவுகள் வருவதற்காகக் காத்திருக்கிறோம். தடுப்பூசியைப் பொறுத்தவரை நாம் அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில்தான் முடிவுகளை எடுக்க வேண்டும்” என்றார்.

தென் ஆப்பிரிக்காவில் ஓமை க்ரானால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக இருக் கிறது. அதிலும் குறிப்பாக குழந்தை களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். தென் ஆப்பிரிக்கா அதிகமாக சோதனைகளை மேற்கொள்கிறது.  குழந்தைகளுக்கு இன்னும் பல நாடுகள் தடுப்பூசி செலுத்தவில்லை. மிகக் குறைவான நாடுகளே அதுவும் குறைந்த அளவிலேயே தடுப்பூசியை செலுத்தியுள்ளன. அத னால் ஒமைக்ரானால் குழந்தை களும், தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களும் பாதிக்கப்பட லாம். இருப்பினும் நாங்கள் உலக நாடுகளில் இருந்து இன்னும் அதிக மான தரவுகள் வருவதற்காகக் காத்திருக்கிறோம். தடுப்பூசியைப் பொறுத்தவரை நாம் அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில்தான் முடிவுகளை எடுக்க வேண்டும்” என்றார்.
 

;