states

img

‘அதானி தொடர்புடைய மொரீஷியஸ் நிறுவனங்கள் பற்றி வருமான வரித்துறை, செபி-க்கு 10 ஆண்டாக தெரியும்’

புதுதில்லி, ஜுன் 01 - அதானி குழுமத்தில் முதலீடு செய்ததாக ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ அறிக்கையில் குறிப்பிடப் பட்டிருந்த மொரீஷியஸ் நிறுவனங்களில், 2 நிறு வனங்கள் ஏற்கெனவே, கடந்த 10 ஆண்டுகளாக இந்திய வருமான வரித்துறையின் கண்காணிப் பிலும், விசாரணையிலும் இருப்பவைதான் என்று  ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏடு அம்பலப்படுத்தி யுள்ளது. மேலும், இந்த 2 நிறுவனங்களோடு, மொத்தம் 13 நிறுவனங்கள், கடந்த 2020 முதலே இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான ‘செபி’ யின் கண்காணிப்பிலும் இருந்து வருவதாக கூறி யுள்ளது. அதானி குழும முறைகேடுகள் தொடர்பாக, கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசார ணைக்கு வந்தபோது, “அதானி குழும முறைகேடு கள் தொடர்பாக, 2016-ஆம் ஆண்டு முதலே ‘செபி’ விசாரணை நடத்தி வந்தது” என்று சில  மனுதாரர்கள் கூறியிருந்த தகவலை, ‘செபி’ மறுத் தது. “இந்தக் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை, உலகளாவிய வைப்புத்தொகை ரசீது (Depository Receipts) வழங்கியது குறித்து விசாரணை நடத்தப் பட்ட 51 நிறுவனங்களில், அதானி குழுமத்தின் பட்டி யலிடப்பட்ட எந்த நிறுவனமும் இடம்பெறவில்லை. எனவே, ஹிண்டன்பர்க் விவகாரத்தில் முன்கூட்டிய மற்றும் கணிப்புகளின் அடிப்படையில் எந்த முடிவும் எடுக்க வேண்டாம்” என்றும் நீதிபதிகளிடம் ‘செபி’ வேண்டுகோள் விடுத்திருந்தது. ஆனால், அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள 2 நிறுவனங்கள் உள்பட ‘ஹிண்டன் பர்க் ரிசர்ச்’ பட்டியலிட்டிருந்த 4 நிறுவனங்களை, ‘செபி’ கண்காணிப்பில் வைத்திருப்பதும், அதி லொரு நிறுவனத்திற்கு அபராதம் விதித்திருப்பதும் தற்போது தெரியவந்துள்ளது. 

கொரோனாவுக்கு பிந்தைய 2 ஆண்டுகளில் அதானி குழும நிறுவனங்களின் சொத்து மதிப்பு  819 சதவிகிதம் அதிகரித்த நிலையில், இதுதொடர் பாக ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ (Hindenburg Research) நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது.  அதன் முடிவில், அதானி குழுமமானது, தனது  நிறுவனங்களின் பங்கு மதிப்பை அதிகமா கக் காட்டி, மிக அதிக அளவில் கடன் பெற்றிருப்ப தாகவும்,  அதானி குடும்ப உறுப்பினர்கள் மொரீஷியஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் போலி நிறுவனங்களை (ஷெல்) தொடங்கி, பங்குச் சந்தை வர்த்தகத்தில் ரூ. 17 லட்சத்து  80 ஆயிரம் கோடி அளவிற்கு ஊழல் செய்துள்ளதாகவும், பண மோசடியில் ஈடுபட்டதாகவும் கடந்த ஜனவரி 24 அன்று 106 பக்க ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. இது உலகளாவிய அளவில் முதலீட்டா ளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியதுடன், அதானி குழும பங்குகளின் மதிப்பிலும் கடும் சரிவை ஏற்படுத்தியது. அதானி குழுமம், அதன் சந்தை மதிப்பில் ரூ. 13 லட்சம் கோடியை இழந்தது. அதானி  அவரது தனிப்பட்ட சொத்து மதிப்பிலும், சுமார் 9 லட்சம் கோடி ரூபாயை இழந்து, உலகின் 3-ஆவது இடத்திலிருந்து 20-ஆவது பணக்காரர் என்ற இடத்திற்குத் தள்ளப்பட்டார். இதையடுத்து, அதானி மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்திய ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ அறிக்கையின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, ஜே.பி. பர்திவாலா ஆகியோர் அடங்கிய உச்ச நீதி மன்ற அமர்வு, ‘ஹிண்டன்பர்க்’ அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை இரண்டு மாதங்களுக்குள் விசாரிக்குமாறு இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்திற்கு (SEBI) கடந்த மார்ச் 2 அன்று உத்தரவு பிறப்பித்தது. கூடுதல் அவகாசம் வேண்டுமென ‘செபி’ கேட்ட தன் பேரில், தற்போது ஆகஸ்ட் 14 வரை அவகா சத்தை நீட்டித்துள்ளது.

ஆனால், இந்த வழக்கில் விசாரணை நடை பெற்றபோது, “அதானி குழும முறைகேடுகள் தொடர்பாக, 2016-ஆம் ஆண்டு முதலே ‘செபி’  விசாரணை நடத்தி வந்தது” என்று சில மனு தாரர்கள் கூறியிருந்த தகவலை, ‘செபி’ மறுத்தது. “இந்தக் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை, உலகளாவிய வைப்புத்தொகை ரசீது (Depository Receipts) வழங்கியது குறித்து விசாரணை நடத்தப்பட்ட 51 நிறுவனங்களில், அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட எந்த நிறுவனமும் இடம்பெறவில்லை. எனவே, ஹிண்டன்பர்க் விவகாரத்தில் முன்கூட்டிய மற்றும் கணிப்புகளின் அடிப்படையில் எந்த முடிவும் எடுக்க வேண்டாம்” என்றும் நீதிபதிகளிடம் ‘செபி’ கேட்டுக் கொண்டது. மேலும், “அதானி குழுமம் பங்குகளின் அளவுகள் தொடர்பாக ஏதேனும் விதிமுறைகளை மீறியுள்ளதா? என்பதை ஆய்வுசெய்ய 11 வெளிநாட்டு கட்டுப்பாட்டாளர்களை அணுகி இருக்கிறோம்” என்று மட்டுமே தெரிவித்திருந்தது. இந்நிலையில்தான், அதானி குழுமத்தில் முதலீடு செய்ததாக ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த மொரீஷியஸ் நிறுவனங்களில், 2 நிறுவனங்கள் ஏற்கெனவே, கடந்த 10 ஆண்டுகளாக இந்திய வருமான வரித்துறை மற்றும் செபியின் கண்காணிப்பிலும், விசாரணையிலும் இருப்பவைதான் என்று ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏடு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

‘ஏ.பி.எம்.எஸ். இன்வெஸ்ட்மெண்ட் பண்ட்’ (APMS Investment Fund - இது முன்பு ‘மாவி இன்வெஸ்ட்மெண்ட் பண்ட்’ - Mavi Investment Fund என அழைக்கப்பட்டது), ‘அல்புலா இன்வெஸ்ட்மென்ட் பண்ட்’ (Albula Investment Fund), ‘கிரெஸ்டா பண்ட்’ (Cresta Fund), ‘எல்.டி.எஸ் இன்வெஸ்ட்மெண்ட் பண்ட்’ (LTS Investment Fund) மற்றும் “ஸ்டாக் பார்க்கிங் நிறுவனமான” மாண்டெரோசா (Monterosa) இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங்கின் (BVI) கட்டுப்பாட்டில் உள்ள ‘லோட்டஸ் குளோபல் இன்வெஸ்ட்மெண்ட் பண்ட்’  (Lotus Global Investment Fund) ஆகிய 5 மொரீ ஷியஸ் நிறுவனங்கள் அதானி குழுமத்தில் குறிப்பிடத்தக்க அளவிலான பங்குகளை வைத்துள்ளது எனவும், அவை சுமார் 15 வரு டங்களாக இந்த முதலீடுகளைச் செய்து அதானி  பங்குகளை வாங்கியுள்ளது எனவும் ‘ஹிண்டன் பர்க் ரிசர்ச்’ அறிக்கையில் கூறியிருந்தது. இந்நிலையில்தான், ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ சுட்டிக்காட்டியிருக்கும் ‘மாவி இன்வெஸ்ட்மெண்ட் பண்ட்’ என்று முன்னர் அழைக்கப்பட்ட ‘ஏ.பி.எம்.எஸ். இன்வெஸ்ட்மெண்ட் பண்ட்’ (APMS Invest ment Fund), லோட்டஸ் குளோபல் இன்வெஸ்ட் மெண்ட் (Lotus Global Investment) ஆகிய நிறு வனங்கள், 10 ஆண்டுகளாக இந்திய வருமான வரித்துறையின் கண்காணிப்பிலும் இருப்பதாக ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏடும் உறுதிப்படுத்தி யிருக்கிறது. 2017 ‘பாரடைஸ் பேப்பர்ஸ்’ விசாரணை தொடர்பான ஆய்வுகளின்போது இதனைக் கண்டறிந்துள்ளது.

அதானி எண்டர்பிரைஸ் லிமிடெட் (AEL) நிறுவனத்தில் 2006-இல் முதலீடு செய்யத் துவங்கிய மாவி இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனம் (தற்போது ‘ஏ.பி.எம்.எஸ். இன்வெஸ்ட் மெண்ட் பண்ட்’), 2022-ஆம் ஆண்டில்தான் வெளி யேறியுள்ளது. மேலும், அதானி பவர் லிமிடெட் (APL) நிறுவனத்தில் தனக்கிருந்த முழு பங்குகளையும் கவுதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானிக்கு 2013-இல் மூன்று தொகுதியாக விற்பனை செய்துள்ளது. இந்தப் பின்னணியில், செப்டம்பர் 2012-இல் மொரீஷியஸ் வருவாய் ஆணையத்திடமிருந்து (MRA) மாவி இன்வெஸ்ட்மெண்ட் நோட்டீஸ் ஒன்றைப் பெற்றுள்ளது. நேரடி வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தின் கீழ் இந்திய வரி அதிகாரிகளுக்கு தகவல்களைப் பகிர்வதற்காக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. 2010 மே மாதத்தில், ‘செபி’யின் விதிமுறைகளை மீறியதற்காக ‘மாவி’ இன்வெஸ்ட்மெண்ட் பண்ட் (APMS), ரூ. 10 லட்சத்தை அபராதமாகவும் செலுத்தியுள்ளது.

‘செபி’யும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளது. 2011 செப்டம்பரில் ‘மாவி’ நிறுவனம் மீது விதித்த தடை யை செப்டம்பர் 2013-இல் ‘செபி’ நீக்கியுள்ளது. இந்த ‘மாவி இன்வெஸ்ட்மெண்ட் பண்ட்’ நிறு வனம், அதானி டிரான்ஸ்மிஷனில் 1.86 சதவிகிதப் பங்குகளையும், அதானி டோட்டல் கேஸில் 2.72 சதவிகிதப் பங்குகளையும், 2021 வரை அதானி கிரீன் எனர்ஜியில் 1.19 சதவிகிதப் பங்குகளையும் வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 2005-ஆம் ஆண்டு அதானி குழும நிறு வனங்களில் முதலீடு செய்யத் தொடங்கிய மற் றொரு நிறுவனமான, ‘லோட்டஸ் குளோபல் இன்வெஸ்ட்மெண்ட் லிமிடெட்’, தனது அதானி பவர்  லிமிடெட் பங்குகளை 2009 டிசம்பரில் அல்புலா விற்கு (மொரீஷியஸ்) மாண்டெரோசா நிறுவன ஒப்பந்தத்தின் கீழ் விற்றுள்ளது. 2008-இல் அதானி எண்டர்பிரைஸ் லிமிடெட்டில் 4.51 சதவிகி தமாக இருந்த லோட்டஸ் குளோபல் நிறுவனத்தின் முதலீடு, 2010 வரை படிப்படியாக குறைக்கப்பட்டு உள்ளது. மாவி இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனத் தைப் போலவே, லோட்டஸ் குளோபலும், 2014  ஜூலையில் மொரீஷியஸ் வருவாய் ஆணையத்திட மிருந்து (MRA) நோட்டீஸைப் பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தைப் பற்றிய தகவல்களும் மொரீஷியஸ் அரசு மூலம், இந்திய வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு பகிரப்பட்டுள்ளது.

எனவே, அதானி குழுமத்தில் முதலீடு செய்த வெளிநாட்டு ஷெல் நிறுவனங்கள் பற்றி, செபி-க்கோ, இந்திய வருமான வரித்துறைக்கோ எதுவுமே  தெரியாது என்பதல்ல. எனினும், இந்த 13 வெளி நாட்டு நிறுவனங்களின் உரிமையாளர் யார், இந்த நிறுவனங்களுக்கான நிதி ஆதாரம் ஏது? அது எங்கிருந்து வந்தது என்பதற்குத்தான் விடை தெரிய வில்லை என்று ‘ஹிண்டன்பர்க்’ துவங்கி ‘தி இந்தி யன் எக்ஸ்பிரஸ்’ வரை அனைத்து ஆய்வுகளும் கூறுகின்றன. “அதானி குழுமமானது, அதன் தலைவரின் (கவுதம் அதானியின்) சகோதரர் வினோத் அதானி மற்றும் அவரது கடல் கடந்த ‘ஷெல்’ நிறுவனங்களு டன் (Offshore Shell Entities- உற்பத்தி ஏதும் நடக்காத வெறும் லெட்டர்  பேடு கம்பெனிகள்) சந்தே கத்திற்குரிய வகையில் பில்லியன் கணக்கான அமெரிக்க டாலர்களில் பரிவர்த்தனையில் ஈடுபட்டு ள்ளது. இந்த பரிவர்த்தனைகள் பங்கு மற்றும் கணக்கியல் கையாளுதல் பற்றிய தீவிரமான குற்றச்சாட்டை முன்வைப்பனவாகும். கவுதம் அதானியின் மூத்த சகோதரரான வினோத்  அதானியால் வழிநடத்தப்படும் அல்லது அவரு டன் தொடர்புடைய வெளிநாட்டு ‘ஷெல்’ நிறுவனங் களின் (இந்த நிறுவனங்களில் மொரீஷியஸில் உள்ள 38 நிறுவனங்களும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சைப்ரஸ், சிங்கப்பூர் மற்றும் பல்வேறு கரீபியன் தீவுகளில் உள்ள நிறுவனங்களும் அடங்கும்) செயல்பாடுகள் மர்மமாக உள்ளன” என்று ஹிண்டன்பர்க் ரிசர்ச் முன்பு கூறியிருந்தது. அது தற்போது மீண்டும் முன்னுக்கு வந்துள்ளது.

இதுகுறித்து, காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “சம்பந்தப்பட்ட இரண்டு மொரீஷியஸ் நிறுவனங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தகவல் இல்லை. மேலும், ஒன்று அல்லது இரண்டு முறை சம்பிரதாய நிகழ்வாக இந்திய வரித்துறை அந்த இரண்டு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதாக தகவல் உள்ளது. ‘செபி’யும், ‘எப்போதும் அதிவேகமாக இயங்கும்’ வருமான வரித்துறை உள்ளிட்ட துறைகளும் தூக்கத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. அதனால்தான் அதானி நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டதாக கூறப்படும் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலான கணக்கில் வராத நிதி, எங்கு இருந்து வந்தது என்பதற்கு பதிலில்லை. இதனை நாடாளுமன்ற கூட்டுக் குழுவால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

;