states

img

கணிப்பை குறைத்தது ஐஎம்எப் இந்தியாவின் ஜிடிபி 4.6 சதவிகிதம்தான்

புதுதில்லி, மார்ச் 28 - நடப்பு 2021-2022 நிதியாண்டில், இந்தியாவின், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் குறித்த தன்னு டைய கணிப்பை, சர்வதேச நாணய நிதிய மானது 4.6 சதவிகிதமாக குறைத்து அறி வித்துள்ளது. உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர்  காரணமாக, இந்தியாவின் வளர்ச்சிக் கணிப்பை, “சர்வதேச நாணய நிதியம்” குறைத்து அறிவித்துள்ளது.  இதற்கு முன்பாக, 2021-2022  நிதியாண்டில், இந்தியாவின் பொருளா தார வளர்ச்சி 6.7 சதவிகிதமாக இருக்கும்  என சர்வதேச நாணய நிதியம் கணித்திருந்த நிலையில், தற்போது போர் காரணமாக, அதனை 4.6 சதவிகிதமாக குறைத்து அறிவித்துள்ளது.  இந்தியா பல முனைகளில் பாதிப்பு களை எதிர்கொள்ளும் என்றும், குறிப்பாக,  எரிசக்தி பொருட்கள் விலை, வர்த்தக தடை கள், உணவுப் பணவீக்கம், நிதி ஸ்திரமற்ற நிலை என பல பாதிப்புகளை சந்திக்க  வாய்ப்புள்ளது என்றும் அது தெரிவித்துள்ளது.