மகளிர் இட ஒதுக்கீடு மசோதா சட்டமாகியிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. மசோதா சட்டமாகியிருக்கலாம். ஆனால் இச்சட்டம் நடைமுறைக்கு வர பல வருடங்களாகும். 2029 பொதுத் தேர்தலுக்கு முன்பு பல வருடங்கள் நடைமுறைக்கு வராத சட்டத்தால் யாருக்கு என்ன பயன்? இந்த சட்டம் ஒரு கேலியான மாயை, இது கிண்ணத்து தண்ணீரில் தெரியும் நிலவின் பிரதிபலிப்பு. எல்லோரும் சொல்வது போல இது வெறும் தேர்தல் மாயை தான்.