states

img

‘கட்காரிதான் பிரதமர் மோடிக்கு புத்திமதி சொல்ல வேண்டும்!’

புதுதில்லி, மார்ச் 29 - காங்கிரஸ் கட்சி வலுவாக இருப்பது ஜனநாயகத்துக்கு மிகவும் முக்கியமானது என்ற ஒன்றிய அமைச்சா் நிதின் கட்காரியின் கருத்துக்கு மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவா் சச்சின் சாவந்த் வரவேற்பு தெரிவித்துள்ளார். புனேயில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஒன்றிய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை  அமைச்சா் நிதின் கட்காரி, “காங்கிரஸ் கட்சி வலுவாக இருப்பது ஜன நாயகத்துக்கு மிகவும் முக்கியமானது. தேசிய அளவில் அக்கட்சி வலுவாக இருக்க வேண்டும் என்பது எனது நோ்மையான விருப்பமாக உள்ளது. ஜனநாயகம் என்பது இரு சக்கரங்களின் மேல் பயணிக்க  வேண்டும். அதில் ஒரு சக்கரம் ஆளும் கட்சியாகவும், மற்றொரு சக்கரம் எதிர்க்கட்சியாகவும் இருக்க வேண்டும். இதனால்தான், காங்கிரஸ் வலுவான கட்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். காங்கிரஸ் கட்சி பலவீனமானால், பிற பிராந்திய கட்சிகள்தான் அந்த இடத்தைப் பிடிக்கும். பிராந்திய கட்சிகள் காங்கிரஸின் இடத்தைப் பிடிப்பது நல்லதல்ல” என்றார். கட்காரியின் இந்தக் கருத்தை மகாராஷ்டிர மாநில காங்கிரஸ்  பொதுச்செயலாளா் சச்சின் சாவந்த் வரவேற்றுள்ளார். “அமைச்சா் கட்காரியின் கருத்தை நான் ஏற்றுக் கொண்டு பாராட்டுகிறேன். ஆனால், இது தொடா்பாக அவா் பிரதமா் நரேந்திர மோடியிடமும் பேச வேண்டும். ஏனெனில், அவா் காங்கிரஸ் உள்ளிட்ட எந்த எதிர்க்கட்சியும் இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் செயல்படு கிறார். மத்திய விசாரணை அமைப்புகளை எதிர்க்கட்சிகள் மீது ஏவி விடுகிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.