கத்தாரில் நடைபெற்று வரும் 22-வது சீசன் உலகக்கோப்பை தொடரை இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் 18 சேனலிலும், ஜியோ சினிமா ஓடிடியிலும் நேரடியாக காண முடியும். தொடக்க நிகழ்வு மற்றும் முதல் போட்டி ஒளிபரப்பு ஜியோ சினிமா ஓடிடியில் சரியாக, நேரடியாக ஒளிபரப்பாகவில்லை. இதனால் சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள், கால்பந்து ஆட்டத்தை சரிவர பார்க்க முடியவில்லை எனப் புகார் தெரிவித்தார்கள். ஆட்டத்தின் ஒளிபரப்பு அவ்வப்போது அப்படியே நின்றுவிடுவதாலும் பலமுறை ஒளிபரப்பில் தடங்கல் ஏற்படுவதாலும் தங்களுடைய நிலையைச் சமூகவலைத்தளங்களில் வெளிப்படுத்தினார்கள். சில ரசிகர்கள் புகாரும் (டுவிட் டேக்) அளித்தனர்.
கட்டணம் ஏதும் கிடையாது ஜியோ ஜியோ சினிமாவிற்கு எவ்வித சந்தா கட்டணமும் இல்லை. ஸ்மார்ட் போன் மற்றும் ஸ்மார்ட் டிவிகளில் இலவசமாக காணலாம்.
செயலியை புதுப்பித்துக் கொள்ள உத்தரவு
புகாருக்கு டுவிட்டரில் பதில் அளித்த ஜியோ சினிமா நிறுவனம்,”ரசிகர்களே, உங்களுக்கு நல்ல அனுபவத்தைத் தருவதற்காகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். உங்களுடைய ஜியோ சினிமா செயலியை புதுப்பித்துக் கொள்ளுங்கள். சிரமத்துக்கு வருந்துகிறோம்.நாங்கள் இந்தப் பிரச்சனையைக் கவனித்துக் கொண்டிருக்கிறோம். பிரச்சனை என்றால் எங்களுக்கு நீங்கள் மின்னஞ்சல் அனுப்பலாம். நாங்கள் உதவுவோம் என்று அம்பானியின் ஜியோ தெரிவித்தது.