மசோதாவை ஆளுநரால் நிறுத்தி வைக்கவே முடியாது உச்ச நீதிமன்றத்தில் தெலுங்கானா வாதம்
மாநில சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட மசோதாவை நிறுத்தி வைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என தெலுங்கானா அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள் ளது. மாநில சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட மசோதாக்களில் முடிவெ டுக்க ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு நிர்ணயம் செய்தது குறித்தான குடியரசுத் தலைவரின் விளக்கம் கேட்பு மீதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் மசோதாக்களில் முடிவெடுக்க ஆளுநர்க ளுக்குக் காலக்கெடு நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்ப ளித்து விட்டது. அப்போதே இதற்கு ஒன்றிய அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 14 கேள்விகளைக் கொண்ட விளக்கம் கேட்பு குறிப்பை அனுப்பியிருந்தார். இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு ஏற்கெனவே தனது வாதங்களை முன் வைத்துவிட்டது. தற்போது மாநில அரசுகள் தங்கள் வாதங்களை முன்வைத்து வருகின்றன. பாஜக அரசு ஆளும் மாநிலங்கள் இந்த உத்தர வுக்கு எதிராகவும் எதிர்க்கட்சிகள் ஆளும் அரசுகள் மாநில உரிமையை பாதுகாக்கும் வகையிலும் தங்கள் வாதங்களை முன்வைத்து வரு கின்றன. அதன்படி தெலுங்கானா அரசு முன்வைத்த வாதத்தில் ஒரு ஆளுநருக்கு மசோதாவை நிறுத்தி வைக்கும் அதிகாரம் இல்லை எனக் கூறியுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரிக்கின்ற இந்த வழக்கானது, விளக்கம் கேட்பு குறிப்பு தொடர்பான விசாரணை மட்டுமே. முந்தைய உத்த ரவுகளை இந்த விசாரணை மாற்றாது என்பதை உச்ச நீதிமன்றம் ஏற்கெ னவே தெளிவுபடுத்திவிட்டது குறிப்பி டத்தக்கது.