states

img

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வுகளுக்கான பாடத்திட்டம்

ஆதார் கால அவகாசம் நீட்டிப்பு 

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் தங்களின் ஒருமுறை நிரந்தரப்பதிவு கணக்குடன் (OTR) ஆதார் விப ரங்களை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் கட்டாயம் இணைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர் வாணையம் அறிவித்து இருந்தது. ஆனால் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு குழப்பம் ஏற்பட்டது. ஆதார் விவகாரத்தில் சற்று குழப்பத்தை ஏற் படுத்தியது. இதனால் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக் கப்பட்டுள்ளது. 
 

தமிழ்

பகுதி - அ : இலக்கணம் (பொருத்துக, வேர்ச்சொற்கள், எதுகை...) 
பகுதி - ஆ : இலக்கியம் (பாடநூல்களின் சங்ககால நூல் குறிப்புகள்)
பகுதி - இ : தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும் 
இந்த 3 பகுதிகளிலிருந்து 100 கேள்விகள் கேட்கப்படுகிறது. 6 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான தமிழ் (பழைய, புதிய) பாடப்புத்தகங்களை படித்தாலே போதும்.
 

பொது அறிவு 
 

அலகு - 1 :  பொது அறிவியல் 
அலகு - 2 : நடப்பு நிகழ்வுகள் 
அலகு - 3 : இந்தியாவின் புவியியல் 
அலகு - 4 : வரலாறும் பண்பாடும் 
அலகு - 5 : இந்திய ஆட்சியியல் 
அலகு - 6 : இந்திய பொருளாதாரம் 
அலகு - 7 : இந்திய தேசிய இயக்கம் 
அலகு - 8 :  தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு, சமூக அரசியல் இயக்கங்கள் 
அலகு - 9 : தமிழ்நாட்டின் வளர்ச்சி நிர்வாகம்
பட்டப்படிப்பு தரத்தில் பொது அறிவு கேள்விகள் கேட்கப்படுகின்றன. 6 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான அறிவியல், சமூக அறிவியல் அனைத்து பாடப்புத்தகங்களை முழுமையாக படிக்க வேண்டும். அதாவது பழைய, புதிய என 2 வகையிலான புத்தகங்களை கண்டிப்பாக படிக்க வேண்டும். 11 மற்றும் 12-ஆம் வகுப்பில் வரலாறு, அரசியல் அறிவியல், பொருளாதாரம், இயற்பியல், வேதியியல், உயிரியியல் புத்தகங்களின் முக்கியமான குறிப்புகளை படிக்க வேண்டும். ஆனால் முழுமையாக படிப்பது

கடினம் என்றாலும் முழுமை

யாக படிப்பது கட் ஆப் மதிப்பெண்களுக்கு உதவும்.

கணிதம் 

அலகு - 10 : திறனறிவும், மனக்கணக்கு, நுண்ணறிவும் 6 முதல் 10 வரையிலான கணிதப்பாடப்புத்தகங்களை புரட்டினாலே முழுமையான சூத்திரங்களை தெரிந்துகொள்ளலாம். அதன் பின்பு ஆங்கில வடிவில் இருக்கும் QA (ஆர்.எஸ்.அகர்வால்) புத்தகத்தை திருப்புதல் முறையில் பார்த்தல் கணிதப்பிரிவில் 25 மதிப்பெண்களை முழுமையாக பெறலாம்.

நடப்பு நிகழ்வுகளுக்கு தி இந்து (தமிழ், ஆங்கிலம்), தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் (ஆங்கிலம்) போன்றவைகளை படிக்கலாம்.
ஆங்கிலம் மூலம் முதல்நிலைத் தேர்வுகளை எதிர்கொள்ளுபவர்கள் மொழித்தாளில் தமிழுக்கு பதில் ஆங்கிலம் மட்டும் மாற்றமாக இருக்கும். பொது அறிவு பிரிவில் அனைத்தும் கேள்விகளின் எழுத்து வடிவம் (தமிழ், ஆங்கிலம்) மட்டுமே மாற்றமாக இருக்கும். கேள்விகள் ஒரே மாதிரியாக இருக்கும்