புதுதில்லி, செப். 21 - காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில், காவிரி மேலாண்மை ஆணைய உத்த ரவை அமல்படுத்துமாறு கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள் ளது. காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக்குழு உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் அதிரடியாக கூறியுள்ளது. தமிழகத்திற்கு, காவிரியில் விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி விகிதம் 15 நாட்க ளுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாட கத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த செப்டம்பர் 18 அன்று உத்தர விட்டது. முன்னதாக ஆகஸ்ட் 29 அன்றும் இதேபோன்று ஒரு உத்தரவைப் பிறப்பித்திருந்தது. முன்னதாக, காவிரியில் 24 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது. இந்த இரு வழக்குகளும், நீதிபதிகள் பி.ஆர். கவாய், பி.எஸ். நரசிம்மா , பி.கே. மிஸ்ரா ஆகியோர் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வில், வியாழனன்று விசார ணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கறிஞர்கள் முகுல் ரோத்கி, வில்சன், உமாபதி ஆகியோர் ஆஜராகினர்.
காவிரியில் சொற்ப நீரைத்தான் கர்நாடகா திறந்து விடுகிறது. எனவே, விநாடிக்கு 12 ஆயிரத்து 500 கன அடிநீரை கர்நாடகா திறக்க உத்தரவிட வேண்டும் அவர்கள் வலியுறுத்தினர். கர்நாடகா அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கர்நாடகத்தில் மழை இல்லை, காவிரியில் நீரும் குறைவாக இருக்கிறது என்றார். அப்போது, மழை குறைவுதான் என்பதை ஏற்கிறோம்; இந்த மழை குறைவு காலத்துக்கான நீர் பகிர்வு விவரம் ஏற்கெனவே உள்ளது; அதை நீதிமன்றமும் வரையறுத்துள்ளது; அவ்வாறிருக்க அந்த நீர் அளவையாவது திறக்க வேண்டுமல்லவா? என்று தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோத்கி கேள்வி எழுப்பினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 24 ஆயிரம் கனஅடி தண்ணீர் வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை யை நிராகரித்தனர். அதேபோல் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தர வுக்கு தடை விதிக்க கர்நாடகா அரசின் கோரிக்கையும் நிராகரித்தனர். வறட்சிக் கால அட்டவணைப்படி தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் திறந்து விட வேண்டும் என்றும் கர்நாடகாவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவுகளை அமல் படுத்த முடியாது என்று கூற முடியாது என்றும் நீதிபதிகள் கண்டிப்புடன் கூறி யுள்ளனர்.