புதுதில்லி,டிச.29- வங்கக்கடல் பகுதியில் அமைந்து ள்ள அந்தமான் தீவுகளில் டிசம்பர் 29 புதனன்று அதிகாலை 5.30 மணி யளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்தமானின் போர்ட் பிளேர் நகரின் அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக் கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதி வாகியுள்ளதாகத் தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. போர்ட் பிளேர் நகரின் தென் கிழக்கே 165 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக் கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தேசிய புவியியல் மையம் தனது டிவிட்டரில், “ரிக்டர் அளவுகோலில் 4.3 என்ற புள்ளிக் கணக்கில் புதனன்று அதி காலை 5.30 மணிக்கு அந்தமான் பகுதி யில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது போர்ட் பிளேர் நகரின் தென் கிழக்கே 165 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டு ள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.