states

img

போர்க் கப்பல்களை தாக்கும் மேம்படுத்தப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி

புதுதில்லி, ஜன.12-  போர்க் கப்பல்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட மேம்படுத்தப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை செவ்வாயன்று வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது. கடந்த 1983-ம் ஆண்டு முதல் இந்தியா வும் ரஷ்யாவும் இணைந்து பிரம்மோஸ் ஏவு கணைகளை தயாரித்து வருகின்றன. இந்த ஏவுகணைகளை நீர்மூழ்கிகள், போர்க் கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் நிலத்தில் இருந்து ஏவ முடியும்.  இந்திய ராணுவம், கடற்படை, விமானப் படையில் பிரம்மோஸ் ஏவுகணைகள் செயல் பாட்டில் உள்ளன. உலகின் அதிவேக சூப்பர்சானிக் ஏவுகணையாக பிரம்மோஸ் உள்ளது. இது ஒலியைவிட 3 மடங்கு வேகத்தில் சீறிப் பாயக் கூடியது. பிரம்மோஸ் ஏவுகணைகளின் வேகம், சீறிப் பாயும் தொலைவு தொடர்ந்து மேம் படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2017 மார்ச்சில் நடத்தப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை சோதனையின்போது, 450 கி.மீ. தொலைவு வரை பாய்ந்து இலக்கை தாக்கி அழித்தது. அடுத்தகட்டமாக பிரம்மோஸ் ஏவுகணை பாயும் தொலைவை 800 கி.மீ. ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் போர்க் கப்பல்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட மேம்படு த்தப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணையை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) செவ்வாயன்று வெற்றி கரமாக சோதனை செய்தது.  கடற்படையின் ஐஎன்எஸ் விசாகப்பட்டி னம் போர்க்கப்பலில் இருந்து பிரம்மோஸ்  ஏவுகணை செலுத்தப்பட்டு, நிர்ணயிக்கப் பட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது. இதுகுறித்து ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘அதிநவீன பிரம்மோஸ்  ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது. இந்திய கடற்படை எதற்கும் தயார் நிலை யில் இருக்கிறது என்பதை ஏவுகணை சோதனை மீண்டும் உறுதி செய்துள்ளது. ஏவுகணை திட்டத்தில் இடம்பெற்ற குழு வுக்கு பாராட்டுகள்’’ என்றுதெரிவித்துள்ளார். - பிடிஐ