states

img

பாஜக ஆளும் ஒடிசாவில் பாலியல் துன்புறுத்தலால் தீக்குளித்த மாணவி உயிரிழப்பு

பாஜக ஆளும் ஒடிசாவில் பாலியல் துன்புறுத்தலால் தீக்குளித்த மாணவி உயிரிழப்பு

பாலசோரில் தொடர் போராட்டம் ; பதற்றமான சூழல்

புவனேஸ்வரம் பாஜக ஆளும் ஒடிசா மாநிலத்தின் பாலசோரில் உள்ள பக்கீர் மோகன் கல்லூரியில் ஒருங்கிணைந்த பி.எட். படிப்பு படித்து வந்த மாணவி ஒருவ ருக்கு, அவரது துறைத் தலைவரான சமீர்  குமார் சாஹு என்பவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். பாதிக்கப் பட்ட மாணவி ஜூலை 1ஆம் தேதி கல்லூரி யின் உள்விசாரணைக் குழுவிடம் புகார் அளித் துள்ளார். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக் கப்படாததால்,  பாலியல் துன்புறுத்தல் மற்றும் கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கை கண்டித்து, சனிக்கிழமை  (ஜூலை 12) அன்று சக மாணவர்களுடன் கல்லூரி வாயிலில் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட மாணவி போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது திடீரென கல்லூரி முதல்வர் அலுவலகம் நோக்கி ஓடிய மாணவி, தன் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரைக் காப்பாற்ற முயன்ற சக மாணவர் ஒருவருக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டன. இந்த கோர சம்பவத்தில், மாண விக்கு 95% தீக்காயங்களும், அவரைக் காப் பாற்ற முயன்ற மாணவருக்கு 70% தீக்கா யங்களும் ஏற்பட்டுள்ளன. மாணவி உயிரிழப்பு இந்நிலையில், புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாணவி செவ்வாய்க் கிழமை அன்று உயிரிழந்தார். 70% தீக்காயங்கள் உடன் சிகிச்சை பெற்று வரும் மாணவரின் நிலைமையும் கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  தொடர் போராட்டம் இத்தகைய சூழலில் பாலியல் துன்புறுத்த லால் பாதிக்கப்பட்டு தீக்குளித்த மாணவி உயி ரிழந்ததால், பக்கீர் மோகன் கல்லூரி மாண வர்கள் மீண்டும் போராட்ட அறிவிப்பை வெளி யிட்டனர். இதனால் பக்கீர் மோகன் கல்லூரியில் மட்டுமின்றி, பாலசோர் நகரத்தில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. முன்ன தாக மாணவி தீக்குளித்த சனிக்கிழமை முதல் பாலசோர் மட்டுமின்றி ஒடிசா மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் போராட்டம் நடை பெற்று வருகிறது. பாலசோர் நகரத்தின் மத்தி யப் பகுதியில் மாணவி தீக்குளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, சாலையில் கொடும் பாவி, டயர்களை கொளுத்தி மாணவர்கள், பொது மக்கள் போராட்டம் நடத்தினர்.

“மோடி அவர்களே! மணிப்பூர், ஒடிசாவில் நாட்டின் மகள்கள் எரிந்து கொண்டு இருக்கிறார்கள்”

பாஜக ஆளும் ஒடிசாவில் பாலி யல் துன்புறுத்தலால் தீக்குளித்த மாணவி உயிரிழந்த சம்பவத்தி ற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத் தில் அவர் மேலும் கூறுகையில்,”ஒடிசாவில் நீதிக்கா கப் போராடிய ஒரு மகளின் மரணம், பாஜக அமைப்பின் நேரடிக் கொலையாகவே பார்க்கப்படுகிறது. அந்தத் துணிச்சலான மாணவி பாலியல் சுரண்டலுக்கு எதிராகக் குரல் எழுப்பினார். ஆனால் நீதி கொடுக்கப்படுவதற்கு பதிலாக, அவர் மிரட்டப்பட்டார் ; துன்புறுத்தப்பட்டார் ; மீண்டும் மீண்டும் அவமானப்படுத்தப்பட்டார். மாணவியைப் பாதுகாக்க வேண்டியவர்களே, அவரை நொறுக்கி உடைத்துவிட்டார்கள்.  எப்போதும் போல, பாஜக அமைப்பு குற்றவாளிகளை பாதுகாத்துக்கொண்டே இருக்கி றது. மேலும் ஒரு அப்பாவி மாணவியைத் தீக்குளிக்க கட்டாயப்படுத்தியுள்ளது. இது தற்கொலை அல்ல ; திட்டமிட்ட கொலை. நரேந்திர மோடி அவர்களே, அது ஒடிசாவாக இருந்தா லும் சரி, மணிப்பூராக இருந்தாலும் சரி நாட்டின் மகள்கள் எரிந்து, இறந்து கொண்டிருக்கி றார்கள். நீங்கள் மவுனமாக உட்கார்ந்திருக்கிறீர்கள். நாடு உங்கள் மவுனத்தை விரும்ப வில்லை, பதில்களை விரும்புகிறது. இந்தியாவின் மகள்களுக்கு பாதுகாப்பும் நீதியும் தேவை” என கண்டனம் தெரிவித்துள்ளார்.