பிரபல அசாம் பாடகர் ஜூபின் கார்க் மரண வழக்கில், சிங்கப்பூரில் அவருடன் இருந்த இசையமைப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பீகாரில் சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், மகளிர் வேலைவாய்ப்பு திட்டம் மூலம் 75 லட்சம் பெண்களுக்கு ரூ.10,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தைத் தில்லியிலிருந்து காணொலி வாயிலாக பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை அன்று தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் மூலம் 75 லட்சம் பெண்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.10 ஆயிரம் செலுத்தப்பட்டுள்ளது.
மணிப்பூர், லடாக்கில் நிலநடுக்கம்
கடந்த சில வாரங்களாக கனமழை க்கு இடையே இமயமலைச் சாரலில் உள்ள மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அடுத் தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், வடகிழக்கு மாநிலங்க ளில் ஒன்றான மணிப்பூரில் வியாழக் கிழமை நள்ளிரவு நிலநடுக்கம் ஏற் பட்டுள்ளது. சாந்தெல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த நில நடுக்கம் சீனா வரை எதிரொலித்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் இமய மலைச்சாரலில் உள்ள லடாக்கின் கார்கில் பகுதியிலும் ரிக்டர் அளவு கோலில் 3.6 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவானது. இந்த மிதமான நிலநடுக் கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடி யாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சரிவில் பங்குச்சந்தைகள்
6ஆவது நாளாக தொடர் சரிவில் உள்ள பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் வெள்ளிக்கிழமை அன்று மேலும் 0.95% சரிந்துள்ளது. பிற்பகல் 827 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் முடிவில் சற்று மீண்டு 733 புள்ளிகள் குறைந்து முடிந்தன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 733 புள்ளிகள் சரிந்து 80,426 புள்ளிகளானது. தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 236 புள்ளிகள் சரிந்து 24,655 புள்ளி களில் வர்த்தகம் நிறைவு பெற்றது. இந்திய மருந்துகள் மீது 100% வரி விதிக்கப்படும் என்ற டிரம்ப் அறி விப்பால் மருந்து உற்பத்தி நிறுவன பங்குகள் விலை வீழ்ச்சி அடைந் துள்ளது.