states

img

உ.பி. தேர்தலில் பகுஜன் சமாஜ் பெரிய சக்தியாக உருவாகும்!

லக்னோ, மார்ச் 9- கருத்துக் கணிப்புகளை நாங்கள் நம்ப வில்லை. கட்சித் தொண்டர்கள் மேற்கொள் ளும் பணியை மட்டுமே நாங்கள் நம்புகிறோம் என பகுஜன் சமாஜ் கட்சியின் செய்தித் தொடர் பாளர் சுதீந்திர பதோரியா தெரிவித்துள்ளார். உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வுக்கு வெற்றிவாய்ப்பு என்று தேர்தல் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறியிருந்த நிலையில், அதுதொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுதீந்திர பதோரியா பேட்டி அளித்துள்ளார். “உத்தரப் பிரதேச மக்கள் தங்கள் தீர்ப்பை வழங்கியுள்ளனர். அந்த வாக்குகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பூட்டப்பட்டுள்ளன. பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியின் பேரணிகளில் மக்கள் திரண்ட விதத்தைப் பார்க்கையில், எங்கள் கட்சி பெரிய சக்தியாக உருவாகும் என்று நாங்கள் நம்புகிறோம். கருத்துக் கணிப்புகள் அல்லது தேர்த லுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நாங்கள் நம்பவில்லை. கட்சி தொண்டர்கள் மேற்கொள்ளும் பணியை மட்டுமே நாங்கள் நம்புகிறோம். ஆரம்பத்தில் 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று அகிலேஷ் கூறி னார். தற்போது 300 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கூறுகிறார். அவர் காத்தி ருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இவ்வாறு சுதீந்திர பதோரியா கூறியுள் ளார்.