states

img

இங்கே எல்லாமே ‘இந்தியா’ தான்!

புதுதில்லி, செப். 5 - இங்கே எல்லாமே ‘இந்தியா’ தான்; எல்லாவற்றையும் மாற்றி விடுவீர்களா என்று மோடி அர சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச் செயலாளர் சீத்தா ராம் யெச்சூரி கேள்விக்கணை தொடுத்துள்ளார். ‘ஜி-20’ உச்சி மாநாடு தொடர் பான அழைப்பிதழில் ‘இந்தியா’ என்பதற்கு பதில் ‘பாரத்’ என அச்சிடப் பட்டுள்ளதை ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் பலரும் விமர்சித்துள் ளனர். இதுதொடர்பாக குறிப் பிட்டுள்ள சீத்தாராம் யெச்சூரி, “இந்திய அரசியலமைப்புச் சட்டத் தின் உயிரை இவர்கள் தற்போது எடுத்துவிட்டார்கள். பல  நூற்றா ண்டு காலமாக இந்த நாடு இந்தியா என்றுதான் அறியப்பட்டிருக்கிறது. நமது பாரம்பரியமான உணர்வு களிலும் இந்தியா என்பதே நிலைத்திருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் பிரிவிலேயே, “இந்தியா, அதா வது பாரதம், மாநிலங்களின் ஒன்றிய மாக இருக்கும்” என்று மிகத் தெளி வாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதி லேயே எல்லாம் அடங்கியிருக் கிறது. இது ஒரு கூட்டாட்சி; நாம் மாநிலங்களாக இருக்கிறோம்; ஒரே நாடாக ஒன்றிணைந்திருக்கிறோம். நமது பல்வேறு விதமான வேற்றுமைகள், பன்முகத் தன்மை, அதில் ஒற்றுமை என அனைத்து அம்சங்களும் மேற்கண்ட வரியில் அடங்கியிருக்கின்றன. தற்போது திடீரென்று இவர்கள் ஏன் இந்தியாவை பாரதம் என்று  மாற்றுகிறார்கள் எனத் தெரிய வில்லை. என்ன நோக்கம்? நான்  நினைக்கிறேன், அவர்கள், மதச் சார்பற்ற எதிர்க்கட்சிகளெல்லாம் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள அணி சேர்க்கைக்கு ‘இந்தியா’ என்று பெயரிட்டிருப்பது அவர் களை மிகவும் அச்சமூட்டியிருக்  கிறது; பீதிக்கு உள்ளாக்கியிருக் கிறது; ஆத்திரமூட்டியிருக்கிறது. அவர்கள், ‘இந்தியா’வை ஏன் இவ் வளவு தீவிரமாக வெறுக்கிறார்கள்? இப்போது இவர்கள் இந்தியா  என்று பெயருள்ள நாட்டின் நிறு வனங்களை என்னசெய்வார்களோ? இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் எனப்படும் ஐஐடிகள், ஐஐஎம்கள், இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் என எல்லாவற்றிலும் ‘இந்தியா’ இருக்கிறதே? இந்தோ - பசிபிக் கூட்டணியில் கூட நீங்கள் இருக்கிறீர்களே; அதே போல இந்தோ - சோவியத் உடன் படிக்கைகள் இதற்கு முன்னாள் இருந்தனவே, இப்போதும் அவை வேறு வடிவில் செயல்பாட்டில் உள்ளனவே, அவற்றையெல்லாம் என்ன செய்வீர்கள்? இங்கே எல்லாமே ‘இந்தியா’தான்.  இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார். 

மோடிக்கு ‘இந்தியா’வே பிரச்சனையாகி விட்டது

“பிரதமர் மோடிக்கு இப்போது இந்தியா என்ற பெயரால் பிரச்ச னை ஏற்பட்டுள்ளது. அதனால் இந்தி யாவின் பெயரை ‘பாரத்’ என  மாற்றுகிறார். உலகமே அவரைப் பார்த்து சிரிக்கிறது. நீங்கள் எங்களை, எங்கள் சித்தாந்தங் களை, எங்கள் தலைவர்களை வெறுப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் இந்தியாவையும் இந்தியர்களையும் வெறுக்கா தீர்கள்” என காங்கிரஸ் தலைவர் களில் ஒருவரான பவன் கேரா பதிலடி கொடுத்துள்ளார். ‘இந்தியா ஒளிர்கிறது’ என்பதை பாஜக-தான் முன்வைத்தது. டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட் அப்  இந்தியா, நியூ இந்தியா போன்ற வற்றைக் கொண்டு வந்ததும் பாஜக தானே, அவற்றை எல்லாம் மாற்றிவிடுவீர்களா என்றும் அவர்  கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியா கூட்டணியைக் கண்டு பாஜகவுக்கு அச்சம் 

“அச்சம் காரணமாகவே இது போன்ற செயல்களில் பாஜக-வினர் ஈடுபடுகின்றனர். ‘இந்தியாவுக்கு வாக்களியுங்கள்’ எனக் கூறிய மோடிக்கு, ‘இந்தியா’ கூட்டணி யைக் கண்டு அச்சம் வந்துவிட் டது” என்று பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள் ளார். 

பாரத் கூட்டணி என்றால் அதையும் மாற்றுவார்கள் 

“இந்தியா கூட்டணியின் பெயரை ‘பாரத்’ என்று மாற்றினால் பாஜக அந்த பெயரையும் மாற்றி விடும் என தில்லி முதல்வர் அர விந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரி வித்துள்ளார். நாளையே, ‘பாரத்’ என்ற பெயரை மாற்றிவிட்டு பாஜக என்றுகூட இந்த நாட்டிற்கு பெயர்  சூட்டுவார்கள்” என்றும் தெரி வித்துள்ளார்.

‘ஆன்டி இந்தியன்’ ஆகிப்போன பாஜக-வினர்

“ஆன்டி இந்தியன் என்று அடுத்தவர்களை சொல்லியே பழக்கப்பட்டவர்கள், இப்பொழுது தாங்களே ஆன்டி இந்தியன் ஆகிப் போனார்கள்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடா ளுமன்ற உறுப்பினர் சு. வெங்க டேசன் கிண்டலாகபதிவிட்டுள்ளார்.

ஆர்எஸ்எஸ்தான் செயல் திட்டத்தை வகுக்கிறதா?

“பாரத் என மாற்றுவதற்கான உள்நோக்கம் என்ன? இதன் பின்னணியில் உள்ள அரசியல் என்ன? இந்தியாவின் பெயரை பாரத்  என மாற்ற வேண்டும் என  சமீபத்தில்தான் ஆர்எஸ்எஸ் தலை வர் கூறியிருந்தார். தற்போது இந்த அழைப்பிதழை பார்க்கும்போது பல கேள்விகள் எழுகிறது. ஒட்டு மொத்த இந்திய நாட்டிற்கான செயல் திட்டத்தை ஆர்எஸ்எஸ்-தான் இயற்றுகிறதா?” என்று திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள் ளார்.