states

img

குழப்பத்தில் சில்க்யாரா சுரங்க தொழிலாளர்கள்

உத்தரகண்ட் மாநிலத்தின் உத்தர காசி, யமுனோத்ரியை இணைக்  கும் வகையில் சில்க்யாரா வளைவு - பர்காட்  இடையே 4.5  கி.மீ. தொலை வுக்கு சுரங்கப் பதை அமைக்  கப்பட்டு வந்தது. இந்த சுரங்க பாதை  யில் நவம்பர் 12  அன்று மண் சரிந்து மண் அடைப்பு ஏற்பட்டதால், சுரங்கப் பாதைக்  குள் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்ட னர். 17 நாள் போராட்டத்திற்கு பிறகு 41  தொழிலாளர்களும் சுரங்கத்தில் இருந்து  வெற்றிகரமாக மீட்கப்பட்டனர். தொழிலா ளர்கள் அனைவரும் உத்தரகண்ட் ரிஷி கேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், சில்க்யாராவில் மீண்டும் சுரங்கப்பணி எப்பொழுது துவங்கும். தங்களுக்கு மீண்டும் பணி கிடைக்குமா எனத் தெரியா மல் 41 தொழிலாளர்களும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். 41 தொழிலாளர்களில் ஒருவரான பீகா ரைச் சேர்ந்த மெஷின் ஆபரேட்டர், “வீட்  டிற்குச் செல்வதற்கான விடுப்பு விண்ணப்  பப் படிவத்தை பூர்த்தி செய்துவிட்டேன். கட்டுமானப் பணிகள் எப்போது தொடங் கும் என்று இன்னும் எங்களுக்குத் தெரிய வில்லை” எனக் கூறினார். இதுதொடர் பாக உத்தரகண்ட் அரசு அதிகாரி ஒருவர்,  “சுரங்கப்பாதையில் பாதுகாப்பு தணிக் கைக்கு பிறகே கட்டுமான பணியை தொடர  முடியும்” என கூறினார்.