அந்தமான் - நிக்கோபர் தீவுகளுக்கு கப்பல் சேவையை மேம்படுத்த வேண்டும்
கப்பல் போக்குவரத்து அமைச்சரிடம் சிபிஎம் எம்.பி., ஆர்.சச்சிதானந்தம் வேண்டுகோள்
ஜூலை 31 அன்று மாலை நாடாளுமன்ற கட்டடத் தில் உள்ள கப்பல் போக்குவரத்து அமைச்சர் சர்பானந்த சோனோவாலின் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம், அந்தமான் நிக்கோபர் தீவுகளின் கப்பல் போக்குவரத்து பிரச்ச னைகளைத் தீர்க்கக் கோரி கடிதம் அளித்தார். இந்தசந்திப்பின் போது சிபிஎம் அந்தமான் நிக்கோபர் மாநிலச்செயலாளர் டி.அய்யப்பன் உடன் இருந்தார். ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., விரி வான அறிவுறுத்தல் மற்றும் கடி தத்தை சமர்ப்பித்து பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்தார்: அதில், கேரள மாநிலம் கொச்சி கப்பல் தளத்தில் அந்தமான் நிக் கோபர் யூனியன் பிரதேச நிர்வா கம் 1,000 மெட்ரிக் டன் சரக்கு திறன் கொண்ட இரண்டு பெரிய கப்பல் கள் கட்டுவதற்கு ஆர்டர் செய்தி ருந்தது. ஆனால், கட்டுமானம் பாதி யில் நிறுத்தப்பட்டது. அந்தமான் நிக்கோபர் தீவுகளுக்கு இந்த கப்பல்கள் தேவையில்லை என்று கூறிய ஒன்றிய அரசு, கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்திற்கு மேலும் கட்டுமான பணிகளை தொடர வேண்டாம் என்று உத்தர விட்டுள்ளது. இது ஆழ்ந்த கவலை யை ஏற்படுத்தியுள்ளது. அதனால் இந்த முடிவை ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதே போல பிரதான நிலப்பகுதியிலிருந்து தீவுகளுக்கு செல்லும் பயணிகள் எதிர்கொள்ளும் கடுமையான சிரமங்களை கருத்தில் கொண்டு இந்த கப்பல் கட்டுமான பணிகளை உடனடியாக தொடர வேண்டும். வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் இரண்டு பெரிய கப்பல்கள் சேவைக்கு வந்தால் பிரதான நிலப்பகுதியிலிருந்து தீவுகளுக்கு அதிக சரக்கு போக்குவரத்து நடை பெறும். இதன் மூலம் தனியார் சரக்கு கப்பல்கள் விதிக்கும் அதிக கட்டணங்கள் குறைந்து, தீவுகளில் பல்வேறு பொருட்களின் விலைகள் கணிசமான அளவில் குறையும். மேலும் அந்தமான் நிக்கோபர் தீவு களில் வேலையின்றி இருக்கும் 200 முதல் 300 மாலுமிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். சரக்கு போக்குவரத்து பிரச்சனைகள் தற்போது ஒன்றிய அரசுக்கு சொந்தமான எந்த சரக்கு கப்பலும் போர்ட் பிளேயருக்கும், பிரதான நிலப்பகுதி துறைமுகங்களுக்கும் இடையே இயங்கவில்லை. தனி யார் சரக்கு கப்பல்களின் உரிமம் அடுத்த ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் முடிவடைய உள் ளது. இதனால் தீவு மக்கள் அத்தி யாவசிய பொருட்களின் கடுமை யான பற்றாக்குறையை எதிர் கொள்ள நேரிடும். சிறப்புக் கப்பல் சேவைகள் நிக்கோபர் பழங்குடியினரின் நீண்டகால கோரிக்கையின்படி, கார் நிக்கோபர், கட்சல் போன்ற தெற்கு தீவுகளுக்கு கடல் சீற்றம் காரணமாக பெரிய கப்பல்கள் நெருங்க முடியாத நிலைமை உள்ளது. மூன்று கூடுதல் எம்.வி. சென்டினல் வகை கப்பல்கள் தேவையாக உள்ளது. இதை நிறைவேற்ற வேண்டும். நிரந்தர பணியாளர் நியமனம் அந்தமான் நிக்கோபர் நிர்வா கத்தின் கப்பல்களில் நிரந்தரப் பணி யாளர்கள் பற்றாக்குறை காரண மாக ஒப்பந்த அடிப்படை யில் மாலுமிகள் நியமிக்கப்படு கின்றனர். ஓய்வு காரணமாக ஆண்டுதோறும் நிரந்தரப் பணி யாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், புதிய நிரந்தரப் பணியாளர் நியமனங்கள் செய்ய வேண்டும். அமைச்சர் உறுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் கடிதம் மூலம் விடுத்த கோரிக்கைகள் மற்றும் அனைத்து விஷயங்களையும் சாத கமாக பரிசீலிப்பதாக ஒன்றிய கப்பல் துறை அமைச்சர் சர்பா னந்த சோனோவால் உறுதியளித்தார்.