சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் தாமஸ் ஐசக்
தேவசம்போர்டு ஏற்பாடு செய்துள்ள சபரிமலை பக்தர்களின் உலகளாவிய கூட்டத்தில் கேரள மற்றும் தமிழக முதலமைச் சர்கள் கலந்து கொள்ள வேண்டாம் என்று கேரள பாஜக தலைவர் எச்சரித்துள்ளார். இதன்மூலம் கேரள மறுமலர்ச்சி, மனிதநேய, பன்மைத்துவ மற்றும் சகிப்புத்தன்மை கொண்ட இந்து மத விளக்கத்திற்கும், பாஜகவின் இந்துத்துவாவிற்கும் இடையிலான போர் என்று தெளிவாக உணரப்படுகிறது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
சில வருடங்களுக்கு முன் அமித் ஷா,”பாஜக அரசாங்கம் 40-50 வருடங்கள் நீடிக்கும்” என பேசியிருந்தார். இப்போது புரிந்து விட்டது. வாக்குத் திருட்டில் ஈடுபடுவதால்தான் அவர் உறுதியாக அப்படி சொல்லியிருக்கிறார்.
எழுத்தாளர் சஞ்சய் ஜா
இந்திய மக்கள் வாக்களிக்கும் உரிமைக்காக தங்கள் ஆவணங்களை சமர்ப்பிக்க கட்டாயம் உள்ளது. ஆனால், நாட்டின் உயர் பதவியில் இருப்பவர் சத்தியப்பிரமாண மனுவில், தாம் கூறிய கல்வித் தகுதிகளின் ஆதாரத்தைத் தராமல் இருக்க, ஒரு நீதிமன்ற உத்தரவின் பின்னால் மறைந்து கொள்ளலாமா? என் தலை சுற்றுகிறது.
சமாஜ்வாதி எம்.பி., அவதேஷ் பிரசாத்
“இந்தியா” கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் சுதர்சன் ரெட்டி செவ்வாய்க்கிழமை அன்று உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு வருகை தந்து தனது ஆதரவு கோரினார். சுதர்சன் ரெட்டி ஒரு சிறந்த வேட்பாளர். அவர் குடியரசுத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அரசியல மைப்பின் மீதான தாக்குதல் நிறுத்தப்படும்.