states

தீக்கதிர் விரைவு செய்திகள்

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ரூ.8,308 கோடி யில் 6 வழிச் சாலை அமைக்க ஒன்றிய அமைச்சர வை ஒப்புதல் வழங்கி உள்ளது. 110.9 கி.மீ. நீளத்தில் முக்கிய நகரங்கள், துறைமுகங்களை இணைக்கும் வகையில் சாலை அமைக்கப்பட உள்ளது.

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.ஆன்லைன் சூதாட்டத்தை தண்டனைக்குரிய குற்றமாக்கும் இந்த மசோதா புதன்கிழமை அன்று மக்களவையில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருப்பதி கோவிலுக்கு பக்தர் ஒருவர் 121 கிலோ தங்கம் வழங்கியுள்ளதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். இதன் மதிப்பு ரூ.140 கோடி என செய்திகள் வெளியாகியுள்ளன.