states

img

கனிமங்களின் மறுசுழற்சிக்கு ரூ.1,500 கோடி

பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் வியா ழக்கிழமை அன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கிய கனிமங்களின் மறுசுழற்சியை ஊக்குவிப்பதற்காக ஊக்கத்தொகை அளிக்கும் திட்டத்து க்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள் ளது. இதற்கு ரூ.1,500 கோடி ஒதுக்கப் படும் என இத்தகவலை ஒன்றிய சுரங் கத்துறை அமைச்சகம் தெரிவித்துள் ளது. மூலப்பொருட்களில் இருந்து முக்கியமான கனிமங்களை பிரித்தெடுக் கவும், தயாரிக்கவும் மறுசுழற்சி திறனை மேம்படுத்துவதுதான் இத்திட்டத்தின் நோக்கம் என கூறப்பட்டுள்ளது. மின்ன ணுக் கழிவுகள், லித்தியம் அயன் பேட்டரி கழிவுகள், இதர கழிவுகள் ஆகியவற்றில் இருந்து முக்கிய கனிமங்கள் பிரித்தெ டுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.