states

img

பிரதமர் மோடியின் இல்லம் அருகே சாலை பள்ளங்கள்

பிரதமர் மோடியின் இல்லம் அருகே சாலை பள்ளங்கள்

கர்நாடக மாநில தலைநகர் பெங்க ளூருவில், விட்டு விட்டு பெய்து வரும் கனமழையால் பள்ளங் களுடன் சாலைகள் சேதமடைந்துள்ளன. சாலைகள் சேதமடைந்ததை ஒரு காரண மாக கூறி,”கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கலைக்க வேண்டும்” என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், சாலை பள்ளத் திற்காக ஆட்சியை கலைக்க வேண்டும் என பாஜக கூறியது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்,”கர்நாடக அரசு பெங்களூரு சாலைகளில் ஏற்பட்ட அனைத்து பள்ளங்களையும் சரி செய்து வருகிறது. மழையும் தொடர்ந்து பெய்து வருவதால் பணியில் லேசான தாமதம் ஏற்பட்டுள்ளது. நாட்டில் அனைத்து நக ரங்களிலும் இதே நிலை தான் உள்ளது. நான் தில்லிக்குச் சென்று நகரத்தைச் சுற்றி வந்தேன். பிரதமரின் இல்லத்தி ற்கு முன்னால் உள்ள சாலை உட்பட, அங்குள்ள சாலைகளும் பள்ளங்களால் நிறைந்திருக்கின்றன. இதனை ஊட கங்கள் சென்று பார்க்க வேண்டும்” எனக் கூறினார்.