states

img

வயநாடு நிலச்சரிவு நினைவாக “ஜூலை 30” என்ற பெயரில் உணவகம் திறப்பு

வயநாடு நிலச்சரிவு நினைவாக “ஜூலை 30” என்ற பெயரில் உணவகம் திறப்பு

கேரள மாநிலத்தின் முக்கிய சுற்றுலா தளங்களின் ஒன்றான வயநாட்டில் ஜூலை 30 அன்று பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி சூரல்மலை மற்றும் முண்டக்கை உள்ளிட்ட பகுதி கள் உருக்குலைந்தன. 400க்கும் மேற் பட்டோர் உயிரிழந்தனர். 40க்கும் மேற் பட்டோரை காணவில்லை (சடலம் கிடைக்கவிலலை). 300க்கும் மேற் பட்டோர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், இந்த நிலச்சரிவை குறிக்கும் வகையில் வயநாட்டின் காந்தன்பாரா நீர்வீழ்ச்சி அருகே “ஜூலை 30” என்ற பெயரில் உணவகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. சூரல்மலையில் வசிக்கும் நௌபால் என்பவர் இந்த உணவகத்தை திறந்துள்ளார். நௌபால் நிலச்சரிவு பேரழிவில் தனது மனைவி, 3 குழந்தைகள் மற்றும் பெற்றோர் என 11 குடும்ப உறுப்பி னர்களை இழந்தவர். தனது குடும்ப உறுப்பினர்களின் இழப்பு மற்றும் வயநாடு நிலச்சரிவை நினைவூட்டும் வகையில் “ஜூலை 30” என்ற பெயரில் உணவகத்தை திறந்ததாக நௌபால் கூறியுள்ளார்.  இதுதொடர்பாக பிடிஐ செய்தி யாளரிடம் அவர் மேலும் கூறுகையில், “வயநாடு நிலச்சரிவில் எனது பெற்றோர், மனைவி, 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உட்பட 11 குடும்ப உறுப்பினர்களை நான் இழந்தேன். எனது மூத்த மகள் நப்லா (16) மட்டுமே உடலை அடையாளம் காண முடிந்தது. மீதமுள்ளவர்கள் அழுகிய நிலையில் டிஎன்ஏ மாதிரிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டனர். இந்த பேரழிவின் நினைவாக உணவகத்தின் பெயரை நிலச்சரிவு நிகழ்ந்த நாளிலே (ஜூலை 30) வைத்தேன்” என அவர் கூறினார்.