states

img

கொல்கத்தாவில் வரலாறு காணாத அளவில் கனமழை

கொல்கத்தாவில் வரலாறு காணாத அளவில் கனமழை காம்தகாரியில் 332 மி.மீ., ; 7 பேர் பலி

கொல்கத்தா மேற்கு வங்க தலைநகர் மற்றும் அதனைச் சுற்றி யுள்ள பகுதிகளில் திங்கள் இரவு முதல் செவ்வாய்க் கிழமையன்று காலை வரை இடை விடாமல் வரலாறு காணாத அள வில் பலத்த மழை பெய்தது. இந்த கனமழையால் கொல்கத்தா நகரம் இயல்புநிலை இழந்தது. சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த கனமழை தொடர்பாக கொல்கத்தா பெரு மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொல்கத்தா நகரின் தெற்கு மற்றும் கிழக்கு சுற்றுப்புறங்கள் பெருமழையின் தாக்கத்தை சந்தித்தன. குறிப்பாக காம்தகா ரியில் வியக்கத்தக்க அளவில் ஒரே இரவில் 332 மி.மீ., மழை பதி வாகியுள்ளது. அதே போல ஜோத் பூர் பூங்காவில் 285 மி.மீ., அள விலும், காளிகாட்டில் 280 மி.மீ., மழையும், வடக்கு கொல்கத்தா வின் தந்தானியாவில் 195 மி.மீ., அளவிலும் கனமழை பெய்துள் ளது” என அதில் கூறப்பட்டுள்ளது. வீடுகள் சேதம் மேலும் மாவட்ட நிர்வாகம் அளித்த தகவலின்படி, கொல் கத்தா நகரின் பெரும்பாலான இடங்களில் முழங்கால் அளவு வெள்ளநீர் சாலைகளில் பெருக் கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளது. 300க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி சேத மடைந்துள்ளன. கொல்கத்தா நகரம் முழுவதும் கனமழைக்கு 7 பேர் உயிரிழந்தனர். பலர் படு காயமடைந்துள்ளனர் என செய்தி கள் வெளியாகியுள்ளன. வடகிழக்கு வங்காள விரிகுடா வில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையே கொல்கத்தா கன மழைக்கு காரணம் என தெரி வித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம்,“அடுத்த சில நாட்களுக்கு கனமழை நீடிக்கும்” என தனது அறிக்கையில் கூறி யுள்ளது. மேற்கு வங்கத்தின் மிகப் பெரிய பண்டிகைகளில் ஒன்றான துர்கா பூஜைக்கு (செப்., 28 முதல்) இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளதால் அம்மாநில மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.