states

img

ஞானவாபி மசூதி பிரச்சனை ரத்தன்லால் ஜாமீனில் விடுதலை

புதுதில்லி, மே 22- உத்தரபிரதேச மாநிலம் வார ணாசியில் ஞானவாபி மசூதியில்  கள ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தர விட்டது. இதனையடுத்து நடத்தப் பட்ட ஆய்வில், மசூதியில் சிவ லிங்கம் உள்ளதாக சிலர் தகவலை பரப்பினர்.  இதனிடையே, இது தொடர் பான வழக்கை மாவட்ட நீதி பதிக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, சிவலிங்கம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில், தில்லி பல்கலையின் இந்து பல்க லையில் சமூக அறிவியல் பேராசிரி யர் ரத்தன்லால் கருத்துப் பதிவிட்ட தாக புகார் கூறப்பட்டது.  ஞானவாபி மசூதி குறித்து இந்துத்துவா வெறுப்புணர்வை பரப்புகிறது. துஷ்பிரயோகம், மிரட்டல் போன்ற  நடவடிக்கைகளில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரத்தன் லால் கூறி யிருந்தார். இதற்கிடையில் இரு சமூகங்க ளுக்கு இடையே மோதலைத் தூண்டும் வகையில் கருத்து கூறிய தாக தில்லியைச் சேர்ந்த வழக்க றிஞர் வினீத் ஜிண்டால் அளித்த புகாரின் பேரில் தில்லி சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, ரத்தன்லாலை கைது  செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி னர்.

அறிவுஜீவிகளால் சிறைச்சாலைகள் நிரம்பி வழியும்

ரத்தன் லால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்  அவரை கைது செய்  தது சட்ட விரோதம். அறிவு ஜீவி களால் சிறைச்சாலைகள் நிரம்பி வழியும்.  ரத்தன் லால் மீது வழக்குப்  பதிவு செய்யக்கூடாது.  நோட்டீஸ் எதுமில்லாமல் லாலை நேரடியாக கைது செய்த காவல்துறை மீது துறை ரீதியான விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார் இது எலக்ட்ரானிக் ஆதாரம். நோட்டீஸ் அனுப்பியிருந்தால், ஒரே  கிளிக்கில் ஆதாரத்தை நீக்கி யிருக்கலாம் என காவல்துறை வாதிட்டது. இரு தரப்பு வாதங்களை யும் கேட்ட நீதிபதி ரத்தன் லாலை ஜாமீனில் விடுவித்தார். தலித்துகளுக்கு (பட்டியலின மக்களுக்கு) எதிரான பாஜகவின் அடக்குமுறை டாக்டர் ரத்தன் லால்  கைது செய்யப்பட்டதில் இருந்து  அதிகாரப்பூர்வமாகத் தொடங்கு கிறது. விழிப்புடன் இருங்கள், ஊக்  கத்துடன் இருங்கள், வலுவாக இருங்கள் மற்றும் ஒற்றுமையாக இருங்கள் என்ற பதிவுகள் ட்விட்ட ரில் ட்ரெண்டாகி வருகிறது.

;