ஒன்றிய மோடி அரசு அதானிக்கு ஆதர வாகவும், விவசாயத்தை அளிக்கும் நோக்கத்திலும் கடந்த 2020இல் சர்சைக்குரிய வகையில் 3 வேளாண்ச் சட்டங் களை அமல்படுத்தியது. இந்த விவசாய சட்டங் களால் விளை பொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலை காணாமல் போய்விடும் என்று கூறி பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் தொடக்கத்தில் போரட்டம் நடத்தினர். பின்னர் தில்லியில் நாடுமுழுவதிலும் இருந்து விவ சாயிகளும் சங்கமித்து பிரம்மாண்ட போராட்டம் நடத்தினர். ஒருவருடம் நீடித்த இந்த விவசாயி கள் போராட்டத்தால் மிரண்ட மோடி அரசு 2021 டிசம்பர் மாதம் 3 வேளாண்ச் சட்டங்களை யும் வாபஸ் பெறுவதாக அறிவித்தது. அகில இந்திய விவசாயிகள் சங்கத்துடன் (AIKS) இணைந்து முன்னின்று இந்த விவசாய போராட்டத்தை நடத்திய பாரதிய கிஷான் யூனியன் (BKU) விவசாய அமைப்பின் தலை வர் ராகேஷ் திகாயத், விவசாயிகள் மத்தியில் இல்லையென்றால் அவர் என்கவுன்டரில் கொல்லப்பட்டிருப்பார் என பாஜக எம்எல்ஏ திமிராக பேசியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் காஜியா பாத்தின் லோனியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ நந்த் கிஷோர் குர்ஜா பாக்பத்தின் தாகர்பூர் கிரா மத்தில் நடைபெற்ற மல்யுத்தப் போட்டியின் தொடக்க விழாவின் பொழுது, “ராகேஷ் திகாயத் விவசாயிகளுக்கு துரோகம் செய்து விட்டார். அவர் விவசாயிகள் மத்தியில் இல்லை யென்றால், அவர் என்கவுன்டரில் கொல்லப் பட்டிருப்பார்” என்று கூறினார். பாஜக எம்எல்ஏவின் இந்த திமிர் பேச்சுக்கு விவசாய அமைப்புக்கள் உட்பட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.